தமிழகத்தின் 13-வது முதல்வராக சசிகலா கோஷ்டியைச் சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவி பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் 30 அமைச்சர்களும் பதவியேற்று வருகின்றனர்.
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து ஓ. பன்னீர்செல்வம் முதல்வராக பதவியேற்றார். 2 மாதங்கள் பதவி வகித்த அவர் திடீரென ராஜினாமா செய்தார். இதையடுத்து அதிமுக சட்டசபை குழு தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார்.
சசிகலா தம்மை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என ஆளுநர் வித்யாசாகர் ராவை கேட்டுக் கொண்டார். ஆனால் சசிகலா மீதான சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு நிலுவையில் இருந்ததால் அவரை ஆட்சி அமைக்க அழைக்கவில்லை.
முடிவெடுக்காத ஆளுநர்
அப்போது முதல்வர் ஓபிஎஸ் தாம் கட்டாயப்படுத்தப்பட்டு ராஜினாமா செய்ய வைக்கப்பட்டதாக கலகக் குரல் எழுப்பினார். இதனால் தமக்கும் பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பு தேவை என ஆளுநரிடம் வலியுறுத்தினார். ஆனால் ஆளுநர் எந்த முடிவையும் எடுக்கவில்லை.
சசிக்கு சிறை- எடப்பாடி தேர்வு
இந்த நிலையில் கடந்த 14-ந் தேதியன்று சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அதிமுக சட்டசபை குழு தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டு ஆளுநரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
ஆளுநர் ஆலோசனை
இதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் தரப்பை அழைத்து ஆளுநர் வித்யாசாகர் ராவ் 2 முறை ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் இன்று எடப்பாடி பழனிச்சாமியை ஆளுநர் வித்யாசாகர் ராவ் அழைத்திருந்தார். இதையடுத்து எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் ஆளுநரை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
அதிகாரப்பூர்வ அழைப்பு
இச்சந்திப்பின் முடிவில் தமிழகத்தில் ஆட்சி அமைக்குமாறு எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அதிகாரப்பூர்வமாக அழைப்பு விடுத்தார். இதனைத் தொடர்ந்து இன்று மாலை 4.30 மணிக்கு எடப்பாடி பழனிச்சாமிக்கு தமிழக முதல்வராக ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவி பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் 30 அமைச்சர்களும் பதவியேற்று வருகின்றனர்.
15 நாட்களில் பெரும்பான்மை
முதல்வராகியுள்ள எடப்பாடி பழனிச்சாமி 15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்க ஏற்கனவே ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். தற்போதைய நிலையில் தமிழக அரசியலில் நீடித்து வந்த குழப்பம் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது.
எடப்பாடி பழனிச்சாமி - முதல்வர், நிதித்துறை, உள்துறை உள்ளிட்ட பல துறைகள்
திண்டுக்கல் சீனிவாசன் - வனத்துறை
செங்கோட்டையன் - பள்ளி கல்வித்துறை
செல்லூர் ராஜூ - கூட்டுறவு துறை
தங்கமணி - மின்துறை மற்றும் மதுவிலக்கு
எஸ்.பி.வேலுமணி - உள்ளாட்சி துறை
ஜெயக்குமார் - மீன்வளத்துறை
சி.வி. சண்முகம் - சட்டத்துறை
அன்பழகன் - உயர்கல்வி
சரோஜா - சமூக நலத்துறை
எம்.சி சம்பத் - தொழில்துறை
கருப்பண்ணன் - சுற்றுசூழல்
காமராஜ் - உணவு மற்றும் சிவில் சர்வீஸ் பொதுவிநியோகம்
ஓ.எஸ்.மணியன் - கைத்தறி மற்றும் ஜவுளித்துறை
உடுமலை ராதாகிருஷ்ணன் - வீட்டுவசதி மற்றும் நகர மேம்பாடு
விஜயபாஸ்கர் -சுகாதாரத்துறை
துரைக்கண்ணு - விவசாயத்துறை
கடம்பூர் ராஜூ- செய்தி துறை
உதயகுமார் - வருவாய்த்துறை
வெள்ளமண்டி நடராஜன் - சுற்றுலா துறை
வீரமணி - வணிக வரித்துறை
ராஜேந்திரபாலாஜி - பால்வளத்துறை
பெஞ்சமின் - ஊரக தொழில்துறை
நிலோபர் கபில் - பணியாளர்நலத்துறை
எம்.ஆர்.விஜயபாஸ்கர் - போக்குவரத்து துறை
மணிகண்டன் - தகவல் தொழில்நுட்பத்துறை
ராஜலட்சுமி - ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி நலத்துறை
பாஸ்கரன் -காதித்துறை
சேவூர் ராமச்சந்திரன் -அறநிலையத்துறை
வளர்மதி - பிற்பட்டோர் நலத்துறை
பாலகிருஷ்ண ரெட்டி- கால்நடைத்துறை
ஓ.பன்னீர் செல்வத்தின் அமைச்சரவையில் இடம்பெற்றவர்களுக்கு அதே துறை ஒதுக்கப்பட்டுள்ளது. மாஃபா பாண்டியராஜனுக்கு பதில் பள்ளிக்கல்வித்துறை செங்கோட்டையனுக்கு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.