Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 13, 2017

சசி-யை ஆதரிப்பதாக 119 அ.தி.மு.க M.L.A-க்கள் கையெழுத்திட்ட கடிதம் : உயர்நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் தாக்கல்


தமிழக முதல்வராக பதவியேற்க சசிகலாவை ஆதரிப்பதாக 119 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. M.L.A-க்களின் கடிதத்தை உயர்நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் தாக்கல் செய்தார். ஆனால் நீதிமன்றம் சட்ட ஆணையரை நியமித்து விசாரணை நடத்த வழக்கறிஞர் பாலு கோரினார்.

பெரும்பான்மையை நிரூபிக்க MLA-க்கள் அணிவகுப்பு நடத்த முடியாது என நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். முன்னதாக கூவத்தூரில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கியிருப்பது குறித்து உயர்நீதிமன்றத்தில் காவல்துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அந்த அறிக்கையில் அங்குள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் நலமுடன் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சசிகலா தரப்பினரால் கூவத்தூரில் சிறைவைக்கப்பட்டுள்ள அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களிடம் பயங்கர கெடுபிடி காட்டப்படுவதாகவும், அங்கிருந்து வெளியேற முடியாதபடி அவர்களை அடைத்து வைத்துள்ளதாகவும் புகார் எழுந்தது. இதனையடுத்து குன்னம் சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரனை ஆஜர்படுத்த கோரி இளவரசன் என்பவர் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.