Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 4, 2017

அமெரிக்காவில் 1 லட்சம் வெளிநாட்டு விசாக்கள் ரத்து.. டிரம்ப்பின் தொடரும் அதிரடிகள்


அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கடந்த 27-ந்தேதி அதிரடியாக சில நிர்வாக உத்தரவுகளை பிறப்பித்தார்.அதில், உலகின் எந்தவொரு நாட்டில் இருந்தும் வரும் அகதிகள், அமெரிக்காவில் நுழைவதற்கு 4 மாதம் தடை விதிக்கப்பட்டிருப்பதும், சிரியா அகதிகள் மறு உத்தரவு பிறப்பிக்கிற வரையில் அமெரிக்கா வர முடியாது என்பதும், ஈராக், சிரியா, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், ஏமன் ஆகிய 7 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு விசா வழங்குவது 3 மாதங்களுக்கு நிறுத்தப்படும் என்பதும் முக்கியத்துவம் வாய்ந்தவை ஆகும்.

டிரம்பின் உத்தரவுக்கு எதிராக அந்நாட்டில் உள்ள நீதிமன்றங்களில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.  இந்த நிலையில், அலெக்ஸ்சாண்டிரியா மத்திய நீதிமன்றத்தில் அட்டர்னி ஜெனரல் வாதிடும் போது, டிரம்பின் பயண தடை உத்தரவுக்கு பிறகு ஒருலட்சத்திற்கும் மேலான விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக  தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.