Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

February 21, 2017

07 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த முதியவர்!


ஆந்திரமாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் மட்ட வானி தெருகு பகுதியை சேர்ந்தவர் ஆஞ்சனேயலு (வயது 60).
இவருக்கு இளம்வயதில் திருமணமாகி மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர்.
ஆஞ்சனேயலு மனைவியை சித்ரவதை செய்ததால் அவர் கணவரை விட்டு பிரிந்து சென்று விட்டார்.
கூடவே 2 குழந்தைகளையும் அழைத்து சென்று விட்டார்.
அதன் பிறகு ஆஞ்ச னேயலு தனக்கு 6 ஏக்கர் நிலம் இருப்பதாக கூறி ராவி பாடு, தோடூர், அமலா புரம், ராஜாபடமரா, சகம்தெரு ஆகிய 5 பெண்களை தனித்தனியாக ஏமாற்றி திருமணம் செய்து கொண் டார்.
திருமண வாழ்க்கை கசந்ததும் அவர்களை விரட்டி விட்டார்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சங்காய்கடம் பகுதியை சேர்ந்த லட்சுமி என்ற பெண்ணை ஆஞ்சனேயலு 7-வதாக திருமணம் செய்தார்.
தனக்கு 6 ஏக்கர் நிலம் இருப்பதாகவும் தனது வயதான தாயாரை கவனிக்க வேண்டும் என்று ஏமாற்றியும் திருமணம் செய்தார்.
இந்த நிலையில் கர்ப்ப மான மனைவி லட்சுமியை பிரசவத்துக்காக ஆஞ்ச னேயலு தாய் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.
லட்சு மிக்கு ஆண் குழந்தை பிறந் தது. குழந்தை பிறந்த பிறகு ஆஞ்சனேயலு மனைவி லட்சுமியை அழைத்து வரவில்லை.
இதனால் லட்சுமி விசாரித்த போது ஆஞ்சனேயலு ஏற்கனவே 6 முறை திருமணம் செய்த தாகவும் தான் 7-வது மனைவி என்றும் தெரியவந்தது.
இதையடுத்து லட்சுமி குழந்தையுடன் ஆஞ்சனேயலு வீட்டுக்கு சென்றார். அப் போது ஆஞ்சனேயலு தலை மறை வாக இருந்தார்.
அவரது வயதான தாய், லட்சுமியை வீட்டுக்குள் விட மறுத்தார்.
இதனால் லட்சுமி சுயதொழில் குழு பெண் களின்உதவியை நாடினார். பின்னர் அவர்களுடன் சேர்ந்து லட்சுமி கணவன் வீட்டு முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அதன் பிறகு மகளிர் சுயஉதவி குழுவினர் வீட்டு கதவை உடைத்து லட்சுமியையும், குழந்தையையும் வீட்டுக்குள் அனுப்பி வைத்தனர்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.