Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 9, 2017

தோனி விலகியது சரியே: யுவராஜ் சிங்


இந்திய அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து தோனி விலகியது சரியான முடிவு என்று யுவராஜ் சிங் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக பேசிய யுவராஜ் சிங், தோனியின் தலைமையின் கீழ் டி20 உலகக்கோப்பை, ஒருநாள் போட்டி உலகக் கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் கோப்பை ஆகியவற்றை இந்திய அணி வென்றுள்ளது. அதுமட்டுமில்லாமல் தோனியின் தலைமையின் கீழ் இந்திய அணி சர்வதேச டெஸ்ட் ரேங்கிங்கில் முதலிடம் பிடித்தது. எல்லா கேப்டன்களாலும் இந்த சாதனையை சாத்தியமாக்க முடியாது. கேப்டன் பொறுப்பிலிருந்து தோனி விலக முடிவு செய்தது சரியானதே என்றார். 2019ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிகளுக்கு இந்திய அணி விராத் கோலி தலைமையில் தயாராகும் விதத்தில் தோனியின் முடிவு அமைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார். இந்திய அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக மகேந்திரசிங் தோனி, கடந்த 4ம் தேதி அறிவித்தார். அதேநேரம், இங்கிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் மற்றும் டி20 அணியில் விராத் கோலி தலைமையிலான அணியில் இடம் பிடித்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.