“அவர் அது செய்தார்... இவர் இந்தத் தமிழ் சமூகத்துக்காக என்னவெல்லாம் செய்திருக்கிறார் தெரியுமா...?” என்று நீங்கள் என்ன வேண்டுமானாலும் சப்பைக்கட்டு கட்டிக் கொள்ளுங்கள். தமிழகத்தில், தொண்ணூறுகளை ஒட்டிப் பிறந்த ஒரு தலைமுறை, நிச்சயம் எந்த நல்ல அரசியலையும் இங்கு காணவில்லை. சமூகத்துக்குத் தேவையான எந்த நல்ல அரசியல் நகர்வுக்கும் நாங்கள் சாட்சியாக இருக்கவில்லை. “இது பெரியார் பிறந்த மண்... அண்ணா ஆண்ட மாநிலம்...'' என்று பெருமை பிதற்றும் திராவிட அரசியலின் நீட்சியாக இருக்கும் கட்சிகள் எல்லாம் பெரியாருக்கும், அண்ணாவுக்கும் செய்தது பச்சைத் துரோகமன்றி வேறில்லை.
“அண்டை மாநிலமும்... தமிழகமும்!”
அண்டை மாநிலங்கள் தங்கள் மாநிலத்தின் ஆன்மாவைச் சிதைக்கும், நசுக்கும் பிரச்னைகள் எழும் போதெல்லாம், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று பார்க்காமல், தங்களின் அனைத்து வேறுபாடுகளையும் தள்ளிவைத்துவிட்டு, இறுக கைகளைப் பற்றிக்கொண்டு தங்கள் மாநிலத்தின் நலனுக்காக ஒன்றுபட்டு நிற்கும். மத்திய அரசு தங்கள் மாநிலத்தின் நலனுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்கும்போது, தாங்கள் மத்திய அரசில் அங்கம் வகித்தாலும்... அது குறித்து எல்லாம் கவலைகொள்ளாது. உறுதியாக எதிர்க்கும். எப்போதும் தமிழகத்தில் அதுபோல ஒரு காட்சியைக் காணாத தமிழகத்தின் 'Gen Z' தலைமுறை இதையெல்லாம் ஏக்க பெருமூச்சுடன் பார்த்து நிற்கும்.
காவிரிப் பிரச்னை, முல்லைப் பெரியாறு என தமிழகத்தின் ஜீவாதார பிரச்னைகள் வரிசைக் கட்டி நிற்கும் போதுகூட தமிழகக் கட்சிகள் என்றுமே ஒன்றுபட்டு நின்றதில்லை; ஒன்றுசேர்ந்து குரல் கொடுத்ததில்லை; மத்திய அரசை நெருக்கியதில்லை. தமிழகத்தின் நலன் அவர்களுக்கு எப்போதும் தங்கள் நலன், தங்கள் கட்சியின் நலனை அடுத்த ஒன்றாகத்தான் இருந்திருக்கிறது... இப்போது இருக்கவும் செய்கிறது. இது என்றாவது ஒரு நாள் மாறாதா... தங்கள் வேற்றுமைகளை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டுத் தமிழகத்தின் நலனுக்காகக் கட்சிகள் ஒன்றிணைந்து நிற்காதா என்று ஏங்கி நிற்கிறபோது... “இல்லை... நாங்கள் மாறமாட்டோம்... இதுதான் நாங்கள்... இவ்வளவுதான் நாங்கள்...எங்கள் திசைவழி இதுதான்!” என இந்த அவதூறு அரசியல் பயணத்தில் புதிதாகப் பொறுப்புக்கு வந்தவர்களும் ஏறி இருக்கிறார்கள். செயல்பாடுகள் அல்ல... அறிக்கை யுத்தம் மட்டும்தான் அரசியல் என்பதை நெருங்கி நின்று பார்த்தவர்கள், அதே வழியில் பயணிக்கத் தொடங்கி இருக்கிறார்கள். ஸ்டாலின் மற்றும் சசிகலாவைத்தான் குறிப்பிடுகிறேன்!
“போர்... ஆமாம் போர்...!”

சசிகலாவிடமிருந்து வந்த முதல் அறிக்கை அச்சமூட்டுவதாகத்தான் இருந்தது. மிகையாகவெல்லாம் சொல்லவில்லை. உண்மையில் சிறு மாற்றம் நிகழாதா... அவநம்பிக்கையுடன் இருக்கும் தமிழக மக்களிடம் தன்னை நிரூபிக்க ஏதாவது செய்யமாட்டாரா என்று ஏங்கி நின்றவர்களுக்கு, அவர் பரிசளித்ததெல்லாம் அதிர்ச்சியும், அச்சமும் மட்டும்தான். ஆம், அந்த அறிக்கை முழுவதும் தன்னை... தன்னை மட்டும் முன்னிலைப்படுத்துவதாக மட்டும்தான் இருந்தது. ஜெயலலிதா நினைவிடத்தைச் சென்று பார்த்தது தொடர்பான அந்த அறிக்கையில் உடன் வந்த தமிழக முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் பெயர் இல்லை... பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை பெயர் இல்லை. அந்த அறிக்கை முழுவதும் அவர் பெயர் மட்டும்தான் நீக்கமற நிறைந்து இருந்தது.
அடுத்த அறிக்கை ஜல்லிக்கட்டு தொடர்பானது. இந்த அறிக்கை யுத்தத்தை முதலில் தொடங்கி வைத்தவர் ஸ்டாலின். தி.மு.க-வின் செயல் தலைவராக பொறுப்பேற்றுள்ள ஸ்டாலின், ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக ஓர் அறிக்கை வெளியிடுகிறார், வழக்கம்போல் தங்களைத் தூய்மையானவர்கள் என்று நிரூபிக்க, கற்களை அ.தி.மு.க மீது வீசுகிறார். நாங்கள் ஆட்சியில் இருந்ததுவரை ‘ஜல்லிக்கட்டு’ நடந்தது. அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தபின்தான் தடை என்பதாக அந்த அறிக்கை நீளமாக உள்வாங்கி, அதில் அ.தி.மு.க மசாலாவைத் தடவி... “இல்லை... இல்லை... உங்களால்தான் தடை” என்று புள்ளி விபரங்களுடன் மறுப்பறிக்கை விடுகிறார்.
இத்தனை நாட்கள் இங்கு இதுதானே நடந்தது. இதைப் பார்த்துத்தான் தமிழகம் சோர்வுற்றது. மாநில பிரச்னைகளின் போதெல்லாம் “உன்னால்தான் பிரச்னை” “இல்லை... இல்லை... உன்னால்தான் பிரச்னை” என்று இங்கு எப்போதும் நீட்டி முழக்கப்பட்டு, மையப் பிரச்னை மறக்கடிக்கப்பட்டு, மழுங்கடிக்கப்பட்டு இவர்களின் அறிக்கை யுத்தம்தானே முக்கியச் செய்தியாக்கப்பட்டது. “போர்... ஆமாம் போர்...” என்று யாருக்கும் நலன்பயக்காத வெற்று அரசியல்தானே நடந்தது. அதே வெற்றுப் போரைத்தான் இவர்களும் தொடுப்பார்கள் என்றால், இப்படியாகத்தான் கட்சியைச் செலுத்துவார்கள் என்றால், அதற்கு ஏன் இன்னொரு தலைமை...! எதுவும் மாறப் போவதில்லை... பதவிகள் மட்டும்தான் நிரப்பப்படுமென்றால் மக்களுக்கு என்ன பயன்...?
“வரிசைக்கட்டி நிற்கும் பிரச்னைகள்!”
உங்கள் கார் கண்ணாடியைக் கொஞ்சம் இறக்கிவிட்டுச் சாமான்யனைப் பார்த்தால்... அவன், கண்களில் செல்லாக்காசு விவகாரத்தினால் ஏற்பட்ட இன்னல்களின் பரிதவிப்பு தெரியும். உங்கள் வாகனம் தஞ்சைக்குச் சென்றால் உங்களால் விவசாயியின் பிணவாடையைக்கூட நுகர முடியும். திருப்பூர் பக்கம் சென்று பாருங்கள்... பின்னலாடை தொழில் கந்தலாகிக் கிடக்கிறது. செல்லாக்காசு விவகாரம், விவசாயிகளின் தற்கொலை என தமிழகத்தில் பிரச்னைகள் வரிசைக்கட்டி நிற்கின்றன.
ஆளுங்கட்சியான சசிகலாவுக்கும்... எதிர்க்கட்சியான ஸ்டாலினுக்கும்... வேலைகள் வரிசைக்கட்டி நிற்கின்றன. அந்த வேலைகளில் கவனம் செலுத்துங்கள். தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லமுடியுமா என்று யோசியுங்கள். இதைச் செய்தால், நிச்சயம் உங்கள் மீது... புதிய தலைமுறை இளைஞர்களுக்கு நம்பிக்கை பிறக்கும். அரசியல் மீதும் நம்பிக்கை பிறக்கும். அதைவிடுத்து நீங்களும் வெற்று அறிக்கை யுத்தத்திலேயே காலத்தைக் கழிப்பீர்களாயின், நிச்சயம் உங்களால் தமிழகத்துக்கு எந்த நன்மையும் பிறக்காது!

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.