தமிழக பா.ஜ.க.வில் சேர்ந்த மாற்றுக் கட்சியினருக்குரிய முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்ற குமுறல் எழுந்துள்ளது. இதில் தமிழக ஐ.பி.எஸ் அதிகாரியான சிதம்பர சுவாமியை பா.ஜ.க.வினர் சரியாக பயன்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது நாடு முழுவதும் நரேந்திர மோடியின் அலை வீசினாலும் தமிழகத்தில் மட்டும் இரட்டை இலை துளிர்த்தது. நாகர்கோவிலைத் தவிர மற்ற தொகுதிகளில் அ.தி.மு.க வெற்றிப் பெற்றது. இதனால் தமிழகத்தின் மீது பா.ஜ.க.வின் டெல்லி தலைமைக்கு கடும் கோபம் ஏற்பட்டது. தமிழகத்திலும் பா.ஜ.க, கால்பதிக்க வேண்டும் என்ற சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருந்த நேரத்தில் ஜெயலலிதாவின் மரணம் அதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி இருப்பதாக பா.ஜ.க.வினர் கருதுகின்றனர்.
தமிழக பா.ஜ.க.வின் தலைவராக இருந்த பொன்.ராதாகிருஷ்ணன், எம்.பி.யானதும், அவருக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது. உடனடியாக அவர் வகித்த தலைவர் பதவி தமிழிசை சௌந்தரராஜனுக்கு வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தமிழக பா.ஜ.க.வில் கங்கை அமரன், கரு.நாகராஜன், ஐ.பி.எஸ் அதிகாரிகள் சிதம்பர சுவாமி, பாலசந்திரன் ஆகியோர் சேர்ந்தனர். இதில் ஐ.பி.எஸ் அதிகாரி சிதம்பர சுவாமிக்கு குறிப்பிடும் வகையில் எந்தப் பதவியும் பா.ஜ.க.வில் வழங்கப்படவில்லை என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், "சிதம்பர சுவாமியின் குடும்பம் பாரம்பரியமிக்க தி.மு.க.வைச் சார்ந்தது. அவரது மாமனார் எஸ்.கே பழனிச்சாமிக்கு, கருணாநிதியிடமும், பேராசிரியர் அன்பழகனிடமும் நெருங்கிய பழக்கம் இருந்தது. எஸ்.கே.பழனிச்சாமி, 1972ல் சூலூர் ஒன்றிய தி.மு.க செயலாளராக இருந்தார். கொங்கு மண்டலத்தில் செல்வாக்கு உடைய அந்த குடும்பத்தைச் சேர்ந்த சிதம்பர சுவாமி ஐ.பி.எஸ்.க்கு தி.மு.க ஆட்சிக்காலத்தில் உளவுத்துறை ஐ.ஜி பதவி வழங்கப்பட்டது. தி.மு.க.வின் அனுதாபியான சிதம்பர சுவாமி, பா.ஜ.க.வில் சேர்ந்தது தனிக்கதை.
கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த பா.ஜ.க பெண் பிரமுகரின் அழைப்பின் பெயரில் சிதம்பர சுவாமி, அந்த கட்சியில் இணைந்தார். அவருக்கு செயற்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. காவல்துறையில் திறமையாக செயல்பட்ட அவரை பா.ஜ.க. சரியாக பயன்படுத்தவில்லை. இதனால் அவர், பெயரளவுக்கு செயல்பட்டு வருகிறார். தமிழகத்தில் கால்பதிக்க பா.ஜ.க முயற்சிக்கும் இந்த நேரத்தில் சிதம்பர சுவாமி போன்றவர்களை கட்சியின் தலைமை சரியாகப் பயன்படுத்திருக்க வேண்டும். ஆனால் அதை மாநில பா.ஜ.க. தலைமை செய்யவில்லை. இதனால் சிதம்பர சுவாமி, பா.ஜ.க.விலிருந்து விலகி, மீண்டும் தி.மு.க.வில் இணைய திட்டமிட்டுள்ளார். விரைவில் தி.மு.க.விலிருந்து அவருக்கு அழைப்பு வரும் என்று எதிர்பார்க்கிறோம். அவருடன் கொங்கு மண்டலத்திலிருந்து பலர் பா.ஜ.க.விலிருந்து தி.மு.க.வுக்கு செல்ல திட்டமிட்டுள்ளோம்" என்றனர்.
ஐ.பி.எஸ் அதிகாரி சிதம்பர சுவாமி மட்டுமல்ல பா.ஜ.க.வில் சேர்ந்த பல நிர்வாகிகள், கோஷ்டி பூசல் காரணமாக சுதந்திரமாக செயல்பட முடியாமல் உள்ளனர். இதனால் அவர்களும், அவர்களின் ஆதரவாளர்களும் பா.ஜ.க நிர்வாகிகள் மீது அதிருப்தியில் உள்ளனர். இதனால் பா.ஜ.க.விலிருந்து விலகி விரைவில் வேறு முகாமுக்கு மாற அதிருப்தி பா.ஜ.க.வினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன.
இதுகுறித்து பா.ஜ.க நிர்வாகி ஒருவர் கூறுகையில், "தற்போது பா.ஜ.க.வில் பொறுப்பில் இருப்பவர்களில் சிலர் தங்களது பதவிகளை காப்பாற்றிக் கொள்ளவே நினைக்கின்றனர். தமிழகத்தில் கட்சியை வளர்க்கும் எண்ணம் அவர்களுக்கு இல்லை. இதனால் அவர்களை நம்பி வந்த என்னைப் போன்றவர்கள் நிற்கதியாக நிற்கிறோம். இதனால் மீண்டும் அணி மாறத் தயாராக உள்ளோம். தற்போது பணமதிப்பிழப்பு, ஜல்லிக்கட்டு தடை போன்றவற்றால் தமிழகத்தில் பா.ஜ.க.மீது மக்கள் கடும் விரக்தியில் உள்ளனர்" என்றார்.
இதுகுறித்து பா.ஜ.க. வட்டாரத்தில் கேட்ட போது, "கட்சியில் சேர்ந்தவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. மற்ற கட்சிகளைப் போல பா.ஜ.க.வில் கோஷ்டி பூசலும், குடும்ப அரசியலும் கிடையாது. உழைப்புக்கு ஏற்ற பதவிகளை கட்சித் தலைமை கொடுத்து வருகிறது. தமிழகத்தில் பா.ஜ.க. வளர்ச்சியடைவதை விரும்பாத மாற்றுக்கட்சியினர் இதுபோன்ற தகவல்களைப் பரப்பி வருகின்றனர்" என்றனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.