வருமான வரித்துறை ரெய்டு, தலைமைச் செயலாளர் மாற்றம், ஆளுநரின் கெடுபிடி என தமிழகத்தில் பரபரப்பு காட்டிய பி.ஜே.பி சைலண்ட் மோடுக்கு போய் விட்டது. ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் விளக்கை அணைத்து விட்டு வீட்டுக்குள் பம்மி விட்டார். சசிகலா எதிர்ப்பாளர்கள் என்று சொல்லப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை எல்லாம் போயஸ் தோட்டத்துக்கு விசுவாசமானவர்கள் ஆகிவிட்டார்கள். மக்கள் மனதில் மட்டும் கோபப் புயல் வீசிக் கொண்டிருக்க, அந்தப் புயலிலும் பொறுமையாய் பூப்பறித்துக் கொண்டிருக்கிறார் சசிகலா. ''ஒருத்தனை ஏமாத்துனா அவன்கிட்ட கருணையை எதிர்பார்க்கக் கூடாது; அவன் ஆசையத் தூண்டணும்'' இந்த சிங்கிள் டயலாக்தான், தற்போது மன்னார்குடி குடும்பத்தின் தாரக மந்திரம். இதைவைத்து, சசிகலா சி.எம் என்ன பி.எம். ஆனாகூட யாரும் தடுக்க முடியாது. கைய மடக்கி, மீசையை முறுக்கி வயலன்டா இறங்குனவங்க எல்லாம், இப்போ சைலன்டா கடைய காலி பண்ண என்ன காரணம்...?
பம்மிய பி.ஜே.பி.
'சிங்கம்' சூர்யா மாதிரி முதல்ல களம் இறங்கி கெத்து காட்டியது பி.ஜே.பி-தான். 'ஜெயலலிதாவின் இறப்புக்குப் பிறகு, தமிழ்நாட்டை உற்று கவனிக்கிறாரு மோடி' என்று பண விவகாரத்தையும் மீறி பயத்தை கிளப்பினார்கள். அதன் தொடக்கமாக, தொழிலதிபர் சேகர் ரெட்டி வீட்டில் வருமான வரித்துறை மூலம் 'சடுகுடு' ஆடியது மத்திய அரசு. முதலில் அவுட் ஆன சேகர் ரெட்டியை வைத்துக் கொண்டு, மற்ற நபர்களைப் பிடிக்க ஆட்டம் ஆடியது. மன்னார்குடி தரப்பும் தங்கள் பங்குக்கு சிலரை களமிறக்கியது. அதில் சிலர் பிடிபட்டனர். சிலர் நழுவிக் கொண்டு வந்ததுடன் போனஸ் பாயின்ட்-களையும் எடுத்தனர்.
முதல்வர் ஒ. பன்னீர்செல்வம், டெல்லிக்குச் சென்று மோடியைச் சந்தித்த பின் ஒருவாரம் போயஸ்கார்டன் செல்லாமல் இருந்தார். அடுத்ததாக நடைபெற்ற மத்திய அரசின் ஆட்டம்தான் இதுவரை வரலாற்றில் இல்லாத வகையிலானது. கோட்டையில் தலைமைச்செயலாளர் அறையில் சோதனை நடத்தி, முதல் ரவுண்டில் எதிர் அணியை ஆல்-அவுட் ஆக்கியது. வர்ணனை செய்து கொண்டிருந்த மீடியாக்களும், எதிரணி இனி எழவே முடியாது; விளையாட்டை விட்டு வெளியேறுவது மட்டும்தான் நல்லது என்று ஆருடம் கூறி வந்தன. ஆனால், யாரும் எதிர்பாராத திருப்பமாக ரெய்டில் சிக்கிய ராம மோகன ராவ், 'மத்திய அரசால் எனது உயிருக்கு ஆபத்து' என்று போனஸ் பாயிண்ட் அளிக்க, எதிரணி சற்று நிமிர்ந்து உக்காந்தது. அதற்கடுத்தாற்போல், நடந்த அரசியல் விளையாட்டுகளின் முடிவுகள் எல்லாம் களத்தில் நிர்மாணிக்கப்பட்டவை அல்ல; பணத்தில்தான்.

சசிகலாவை பொதுச்செயலாளராக தேர்வு செய்தது, அதையடுத்து கட்சித் தலைமை அலுவலகம் வந்து பதவி ஏற்றுக் கொண்டது. 'அவரே முதல்வராக வேண்டும்' என அ.தி.மு.க-வினர் கோரிக்கை வைப்பது, என்று எதிரணியின் பாயிண்ட், எக்குத்தப்பாக எகிறியது. இதுவரை கட்சியினரின் எல்லா கோரிக்கைகளையும் ஏற்றுக்கொண்ட 'சின்னம்மா' என்கிற சசிகலா, இதையும் ஏற்றுக் கொள்வாரா? மாட்டாரா? என்பது எல்லாம் மூளைச்சாவு வந்தவன் கூட சொல்ல முடிகிற விஷயம். எதிரணியினர் இத்தனை தூரம் இறங்கி அடித்தாலும் முதலில் சீறிப் பாய்ந்த மத்திய அரசு, தற்போது 'பாயிண்ட் கோட்டுக்கு' பக்கத்தில் டவுசருக்குள் கையை விட்டுக்கொண்டு சும்மா நிற்பதற்கு என்ன காரணம்?. 'எல்லாம் மேற்படிதான்' என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். இதுகுறித்து பி.ஜே.பி பிரமுகர் ஒருவர் கூறுகையில், "ஆரம்பம் முதலே இந்த விவகாரத்தில் முன்னணியில் இருப்பவர்கள் வெங்கய்ய நாயுடு, ஆளுநர் வித்யாசாகர் ராவ், பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர்தான். இவர்கள் மூலமாகத்தான் தங்கள் அணியை தற்போது வலுப்படுத்திக் கொண்டது சசிகலா தரப்பு. வெங்கய்யா நாயுடுவின் குடும்பத்தினருக்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு தொழில் நிறுவனங்களில் சசிகலா குடும்பத்தினர் பங்குதாரர்களாக உள்ளனர். அவருக்கு தனியாகவும் சென்னையில் பல்வேறு தொழில்கள் உள்ளன. முதலில் அவரைத்தான் வளைத்தது மன்னார்குடி தரப்பு. சில பேரங்கள் பேசப்பட்டு, அவரை வழிக்குக் கொண்டு வந்துள்ளனர்.
அவர் மூலமாக வழிக்கு வந்தவர்தான் வித்யாசாகர் ராவ். அதன் பின்பு பொன்னாரிடம் பேசி குளைச்சல் துறைமுகத் திட்டத்தில் முக்கியப் பங்கு என பேசப்பட, டெல்லிக்கான ரூட்டை காட்டி விட்டனர், இந்த மூவரணியினர். இதையடுத்து பி.ஜே.பி மூத்த தலைவர் ஒருவருடன் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. அதில் பேரங்கள் பேசப்பட்டன.
இனி, மத்திய அரசு தரப்பில் இருந்து எந்த குடைச்சலும் இருக்காது. அதற்கான ஒரு சாம்பிள்தான், ஜெயலலிதா சிகிச்சை குறித்து தகவல் அறியும் சட்டத்தில் கேட்டதற்கு, ஆளுநர் கொடுத்துள்ள விளக்கம். அப்போலோ அறிக்கையில் என்ன இருந்ததோ, அப்படியே அந்த அறிக்கையிலும் இருந்தது. சசிகலா பொதுச் செயலாளர் ஆனது குறித்த கேள்விக்கு வெங்கய்யா நாயுடு எந்தப் பதிலும் சொல்லாமல் சென்றது" என்று தெரிவித்தார்.
தீபா & செங்கோட்டையன், தம்பிதுரை:
அப்போலோ, போயஸ் தோட்ட வாசலில், கண்ணகி நியாயம் கேட்பது போல் காத்துநின்ற தீபா கூட முதலில் காட்டிய எந்த தீவிரமும் காட்டாமல் ஒதுங்கத் தொடங்கி இருக்கிறார். அண்மைக் காலமாக அவரது வீட்டில் குவியும் தொண்டர்களுக்குக் கூட, பதில் சொல்லாமல் அவர் தவிர்த்து வருவதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அதிமுக நிர்வாகி ஒருவர் கூறும்போது, "தீபாவின் சகோதரர் தீபக், வசதி வாய்ப்புகளோடு நன்றாக இருக்கிறார். ஆனால் பண ரீதியாக சங்கடத்தில் தீபா இருக்கிறார். அவருக்கு உதவிகளை செய்ய கார்டன் தரப்பு முன்வந்துள்ளது.
இதற்கிடையே 'தீபா தங்கள் பக்கம் இருந்தால், சரியாக இருக்கும்' என பி.ஜே.பி சார்பிலும் அவரை அணுகி இருக்கின்றனர். இப்போது, தீபா குறித்த பேச்சு வார்த்தையில் முக்கிய முடிவு எதுவும் எடுக்காமல் நிலுவையில் உள்ளது. அதற்காகத்தான் மௌனம் காத்து வருகிறார் தீபா" என்றார். எனவே, விரைவில் தீபா விவகாரம் முடிவுக்கு வந்து விடும். அதேபோல் செங்கோட்டையன், தம்பிதுரையை வளைப்பதற்கு சசிகலா தரப்பினர் பெரிதாக ஒன்றும் கஷ்டப்படவில்லை. அவருக்காக பேசப்பட்ட அமைச்சரவை பதவியில் பணிந்து வந்து விட்டார் செங்கோட்டையன். தம்பிதுரையோ, முதலில் முரண்டு பிடித்தார். தன்னை முதல்வராக நியமிக்க வேண்டும் என்று டெல்லியிடம் மன்றாடியவர், அவருக்கு, 'துணை முதல்வர் பதவி தருகிறோம்' என சசிகலா தரப்பில் சொல்லப்படவே உடனடியாக அணி மாறி, தனது துணை சபாநாயகர் லெட்டர்பேடிலேயே 'சசிகலா முதல்வராக வேண்டும்' என்று அறிக்கை கொடுத்து தனது ஆசைக்கு தொடக்கப் புள்ளி வைத்து விட்டார்.

எதிர்ப்பாளர்கள் என எதிர்பார்த்து இருந்தவர்களை வளைத்தது அல்லது அவர்களே வளைந்து கொண்டது சசிகலா தரப்பிற்கு தற்காலிக வெற்றியாக இருக்கலாம். ஆனால், மனசாட்சிப்படி, உங்களிடம் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வளையாத முதுகுகளை உடைய மக்களை, உண்மையான அ.தி.மு.க தொண்டர்களை எதிர்கொள்வதில்தான் இருக்கிறது உங்களின் உண்மையான வெற்றி. ஆனால், அது அவ்வளவு எளிதல்ல என்பதை சசிகலா புரிந்து கொள்ளும் காலம் வரும்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.