தமிழக முதல்வர் ஓ.பி.எஸ்ஸை, அமைச்சர் என்றே சசிகலா அழைப்பதால் அவரது ஆதரவாளர்கள் வருத்தத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலா, கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தி வருகிறார். அந்த கூட்டத்தில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட முக்கிய அமைச்சர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். கூட்டத்தின் மேடையில் சசிகலாவுக்கு மட்டுமே இருக்கை போடப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு கட்சி நிர்வாகிகளின் அருகில் இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
கூட்டத்தில் பேசும் போது சசிகலா, அமைச்சர் பெருமக்களே என்று சொல்கிறார். ஓ.பன்னீர்செல்வம் அங்கு இருந்தாலும் அவரை முதல்வர் என்று குறிப்பிடுவதில்லையாம். இது அவரது ஆதரவாளர்களுக்கு கடும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் கூறுகையில், "அம்மாவிடம் ஓ.பன்னீர்செல்வம் காட்டிய விசுவாசத்துக்கு கிடைத்தப்பரிசுதான் இந்த முதல்வர் பதவி. அம்மா, டான்சி வழக்கு, சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைச் சென்ற போது உடனடியாக முதல்வராக அம்மாவால் சிபாரிசு செய்யப்பட்டவர் ஓ.பன்னீர்செல்வம். அந்தவகையில்தான் இப்போது அம்மா இறந்தவுடன் ஓ.பன்னீர்செல்வமே முதல்வராக்கப்பட்டார். இதற்கு கட்சியில் ஒரு தரப்பு எதிர்ப்பு தெரிவித்தாலும் அவருக்கே ஆதரவு அதிகம் இருந்ததால் அவர் முதல்வராகி விட்டார். ஆனால் முதல்வருக்குரிய மரியாதை கட்சியின் சிலரால் கிடைக்கவில்லை. இது ஓ.பன்னீர்செல்வத்துக்கு தெரிந்தாலும் அதை அவர் பெரிதுப்படுத்தவில்லை. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வளர்த்த கட்சி, தன்னால் பிளவுப்படக் கூடாது என்பதற்காக அமைதியாக இருந்து வருகிறார். தற்போது தமிழகம் முழுவதும் கலந்து கொண்ட கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் கூட ஓ.பன்னீர்செல்வத்தை சசிகலா, முதல்வர் என்று குறிப்பிடாதது கடும் வருத்தம் அளிக்கிறது" என்றனர்.
இதுகுறித்து சசிகலா தரப்பு கூறுகையில், "ஓ.பன்னீர்செல்வம், தன்னை முதல்வர் என்று சின்னம்மா அழைப்பதை விரும்பவில்லை. இதற்கு ஓ.பன்னீர்செல்வத்தின் வளர்ச்சி, அவரின் கட்சி விசுவாசம், சின்னம்மா மீது அவர் வைத்துள்ள நம்பிக்கையே காரணம். சின்னம்மாவுக்காக முதல்வர் பதவியையே விட்டுக் கொடுக்க அவர் தயாராக உள்ளார். ஆனால், சின்னம்மாவுக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே பிரச்னையை ஏற்படுத்த இதுபோன்ற தேவையில்லாத தகவல்கள் பரப்பப்படுகின்றன" என்றனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.