இதோ 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிப்பு வெளியாகி 50 நாட்களைக் கடந்துவிட்டோம். திடீரென அறிவிக்கப்பட்ட இந்த அறிவிப்பால் பல்வேறு தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்க முடியாமல் நெருக்கடிக்கு ஆளான நேரத்தில், புதிய 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வந்தன. அறிவிப்பு வெளியான சில தினங்கள், பழைய 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக Cash Depost Machine இருக்கும் மையங்களில் மக்கள் குவிந்தனர். அதன்பின், செலவுக்காக பணம் எடுக்க ஏடிஎம் வாசல்களில் நின்று கொண்டிருக்கின்றனர். அன்றாடம் பணம் நிரப்பபடும் ஏடிஎம் மையங்களில் கூட, இரண்டு நாட்களுக்கு ஒரு முறை அல்லது மூன்று நாளுக்கு ஒருமுறைதான் பணம் நிரப்பப்பட்டது.
இப்படி ஏ.டி.எம் மையங்களுக்குச் செல்லும் மக்கள், பணம் இல்லையென்றாலும், 100 ரூபாய் கிடைக்காமல் - 2000 ரூபாய்தான் இருக்கிறது என்றாலும் - வெளியில் வரும்போது கோபத்தை முதன்முதலில் வெளிப்படுத்துவது ஏடிஎம் காவலர்கள்மீதுதான். இதற்கு முன் ஏடிஎம் காவலர்களைக் கண்டுகொள்ளாமலே இருந்தவர்கள் இன்று அவர்களைப் பார்த்து வணக்கம் வைப்பதெல்லாம் நடக்கிறது. ‘ஏடிஎம்ல பணம் போட்டா சொல்லுங்க’ என்று நட்பு பாராட்டிச் செல்கிறார்கள். இந்த ‘செல்லாக்காசு’ விவகாரத்திற்குப் பிறகு ஏடிஎம் காவலாளிகளின் மனநிலை எப்படி இருக்கிறது என தெரிந்து கொள்ள ஒரு சிலரை சந்தித்து பேசினோம்.
இளங்கோவன், ஹாடோஸ் சாலை :

"நான் இன்னொரு ஏரியாவுல வேலை பார்த்துட்டு இருந்தேன். கொஞ்சநாளைக்கு முன்னாடி தான் இங்கே மாத்தினாங்க. முன்னவெல்லாம் பணம் இருந்தாலும் இல்லைனாலும் அமைதியா அடுத்த ஏடிஎம்முக்கு போய்டுவாங்க. இப்போ கொஞ்சநாளா அப்படி கிடையாது. எதுனாச்சும் திட்டிடறாங்க. பாவமாத்தான் இருக்கு.. அவங்க பிரச்னை அவங்களுக்கு. எனக்குத் தெரிஞ்ச வழிகளை சொல்லுவேன். என்னால அவங்க கஷ்டத்தை குறைக்க முடியும்னா அதுக்கு என்ன வழியோ அதைச் சொல்லுவேன்"
ஆண்டனி, ஸ்டெர்லிங் சாலை :
“வர்றப்ப, ஷட்டர் இருக்கற நிலையை வெச்சே கடுகடுன்னு ஆகிடும் அவங்க முகம். ‘என்னப்பா இது, இப்படி பண்ணுறீங்க. எங்கேயும் பணம் எடுக்க முடியலை. அவசரத்துக்கு மருந்து மாத்திரை வாங்கணும், வண்டிக்கு பெட்ரோல் போடணும்னாக் கூட கையில காசில்லை. ஏடிஎம் ல பணம் போட்டா கொஞ்சம் கூப்பிட்டு சொல்லுறியாப்பா?’னு நம்பர்லாம் கொடுத்துட்டு போறாங்க. நாம அப்படி எத்தனை பேருக்குச் சொல்ல முடியும். எல்லோருக்கும் இதே பிரச்னை தானே..!?."
விஜயகுமார் , நுங்கம்பாக்கம் :

"அந்த அறிவிப்பு வந்ததுலேருந்து ஏடிஎம்ல பணமே இல்லை தம்பி. இதோ ரெண்டு மாசம் பக்கம் ஆகப் போவுது. அப்பப்போ கூட்டி பெருக்கி சுத்தமா வைச்சுகிறது தான் என்னோட வேலை. ஷட்டரை மூடியே வைச்சு இருப்பதால யாரும் பெருசா இந்தப் பக்கம் வரது இல்லை. சம்பளமும் முன்னே மாதிரி சரியா கிடைக்குறது இல்லை தம்பி. சில பேர் 'எதுக்குய்யா ஏடிஎம்மை தொறந்து வைச்சுக்கிட்டு இருக்க அப்படியே பெட்ரோல் ஊத்தி கொளுத்தி விட வேண்டியது தானே'ன்னு சொல்லிட்டு போறாங்க. இதெல்லாம் கேட்கவே பயமா இருக்கு தம்பி." என்கிறார் அதிர்ச்சியுடன்.
ராஜு, நுங்கம்பாக்கம் :

"எங்க பேங்குல பெருசா பிரச்சனை இல்லை சார். தினமும் பணம் போட்டுடறாங்க. எப்பவும் போல தான் இருக்குது. மத்த ஏடிஎம் ல பணம் கிடைக்காம இங்கே வர்றவங்க ரொம்ப நேரம் காத்திருந்தாச்சும் பணம் எடுத்துகிட்டுப் போறாங்க." என்கிறார்.
ஆர். லக்ஷ்மணன் :

" அஞ்சு வருஷமா இங்கே தான் வேலை பார்த்துட்டு இருக்கேன். இத்தனை வருஷத்துல இப்படி ஒரு பிரச்சனையை நான் பார்த்தது இல்லை. எல்லா நேரத்துலயும் பணம் இருக்கும். இப்போவெல்லாம் மூணு நாளைக்கு ஒரு முறை பணம் கொண்டு வந்து போடறாங்க. அதுவும் கொஞ்ச நேரத்துலயே காலியாகிடுது. என்னத்த சொல்ல.. இப்படியெல்லாம் கஷ்டப்பட வேண்டியதா இருக்குது." என்கிறார் விரக்தியுடன்.
கொம்பையன், அண்ணா சாலை :

"ரொம்ப வருஷமா இந்த வேலை தான் சார் பார்த்துட்டு இருக்கேன். இங்கே பணம் எடுக்க வரவங்க முகத்தை பார்க்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு. வரிசையில நிக்கும் பொழுது புலம்பாம பணம் எடுத்துக்கிட்டு போறவங்க ரொம்ப கம்மிதான். பணம் இல்லாத நேரத்துல இப்படியே நின்னுட்டு இருப்பேன். வர்றவங்க பணம் இருக்குதான்னு கேட்டுட்டு இல்லைன்னு நாம சொன்னதும் 'பணமே இல்லாத ஏ டி எம்க்கு எதுக்கு வாட்ச்மேனு'ன்னு கிண்டலடிச்சுட்டு போவாங்க. பேங்குல பணம் இருந்தா கொண்டுவந்து போடப்போறாங்க நாங்க என்னங்க செய்ய முடியும்."
பல வங்கிகளின் ஏடிஎம் மையங்கள் அப்பொழுது மூடப்பட்டதோடு சரி. இன்னும் திறக்கப்படாமல் மூடியே கிடக்கிறது. புதிய ரூபாய் நோட்டு குறித்த அறிவிப்பு வெளியான தினத்திலிருந்து இப்பொழுது வரையில் தினமும் ஒரு புதிய அறிவிப்பு வந்துகொண்டே இருந்தாலும் ஏடிஎம் மையங்களில் போதுமான அளவுக்கு பணம் இருப்பு இல்லாத நிலையே தொடர்கிறது.
ஒரு விஷயத்தை கவனிக்க முடிந்தது. பெரும்பாலான காவலர்கள், தங்களைத் திட்டும் பொதுமக்களை சாதாரணமாகவே கடந்து செல்கிறார்கள். அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் "பாவம் அவங்களும் என்ன தான் செய்வாங்க சார். ஒவ்வொருத்தருக்கும் எவ்வளவு பிரச்னை இருக்கு. இந்த நேரத்துல நாமளும் அவங்ககிட்ட சண்டைக்கு போனா எப்படி!?. அதான் அதையெல்லாம் பெருசா எடுத்துக்குறது இல்லை." என்கிறார்கள். அடுத்த முறை ஏடிஎம்முக்கு செல்கையில், இவ்வளவு சோதனையான தருணத்திலும் நம் உணர்வுகளை புரிந்துகொண்டு கை கோர்த்து நின்றிருக்கும் அவர்களிடம், ஒரு சிறு புன்னகையை உதிர்த்து வாருங்களேன்..!

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.