Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 11, 2017

#LIVE - என்ன தகுதி இருக்கிறது! பீட்டா மீது சிம்பு ஆவேசம் - #STRForJallikattu


ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக நடிகர் சிம்பு செய்தியாளர்களை சந்தித்து வருகிறார். அதில், 'தமிழை தாய்மொழியாக கொண்டதில் பெருமை அடைகிறேன். தமிழில் ஐந்தாம் வகுப்பு வரை 99 மதிப்பெண்கள் எடுத்தேன். நான் முதலில் தமிழன், பிறகுதான் நான் இந்தியன். தமிழர்களுக்கு ஏகப்பட்ட பிரச்னை இருக்கிறது. இதுவரை வெளியில் அடித்தீர்கள். இப்போது என் வீட்டுக்குள்ளேயே வந்து எனது கலாசாரத்தின் மீது கை வைத்து அடிக்கிறீர்கள். இதை பொறுத்துக்கொள்ள முடியுமா.

ஜல்லிக்கட்டு குறித்து கேள்வி எழுப்ப வெளிநாட்டு அமைப்புக்கு (பீட்டா) என்ன தகுதி இருக்கிறது. மாடுகளை துன்புறுத்தி கறக்கப்படும் பாலை குடித்தவர்களே காளை பற்றி பேசுகிறார்கள். தமிழர்கள் அனாதைகள் அல்ல, கேட்பதற்கு யாரும் இல்லை என நினைத்தார்களா.

கலாசார போட்டியான ஜல்லிக்கட்டு குறித்து கேள்வி கேட்க பீட்டா அமைப்பு யார். இதுவரை வெளியில் அடித்த நீங்கள், எங்கள் வீட்டில், எங்கள் கலாசாரத்தில் வந்து கை வைக்கிறீர்கள். தன் மணம், இனம் மீது உணர்வு இருப்பதால்தான் தமிழகத்துக்கு கர்நாடகா காவிரி நீர் தர மறுக்கிறது.

அரசியல் கட்சி, திரைப்படத்துக்காகவா போராடினார்கள். தமிழ் கலாசாரத்துக்கு போராடியவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியது ஏன். தனித்தனியாக போராட்டம் நடத்துவதால் தான் போலீஸார் தாக்குதல் நடத்துகிறார்கள். ஜல்லிக்கட்டுக்காக போராடும் தமிழக மாணவர்களை நினைத்து பெருமைப்படுகிறேன். தமிழர்கள் அனாதையா, கேட்க ஆளில்லை என நினைத்து விட்டீர்களா. தமிழர்கள் அமைப்பு ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் பிளவுபட்டு கிடக்கின்றனர். ஒற்றுமையில்லை. அனைவரும் தனித்தனியாக போராடுவதால், எந்த பயனும் ஏற்படப்போவதில்லை.

எனது வீடு முன்பு நாளை 10 நிமிடம் மவுனப் போராட்டம் நடைபெறும். அனைவரும் தங்கள் வீட்டு முன்பு மவுனப் போராட்டத்தில் ஈடுபட வேண்டும். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான தனது குரலுக்கு தமிழர்கள் ஆதரவு தர வேண்டும்' எனக் கூறினார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.