நம் விவசாயிகள் மரணத்தை தடுக்க , விவசாயத்தை மீட்டெடுக்க வழிகள் .
விவசாயிகளின் அடிப்படை பிரச்சனைகளுக்கு முக்கிய காரணம் ஒன்று தண்ணீர், மற்றொன்று கடன்.
தண்ணீர் பிரச்சனையை போக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் முதலில்..
1. விவசாயத்தை குறைந்த தண்ணீரை கொண்டு செயல்படுத்தும் முறைகளை கையாள அரசு , வேளாண் பல்கலை கழகங்கள், தன்னார்வ அமைப்புக்கள் மற்றும் விவசாய ஆர்லவலர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து விவசாயிகளுக்கு தக்க பயிற்சி, விழிப்புணர்வு மற்றும் அரசு மானியங்களை பெற்றிட உதவிகள் செய்யலாம்.
2. தண்ணீருக்கு முதலில் பிறரிடம் கையேந்துவதற்கு முன் மழைக்காலங்களில் கிடைக்கும் தண்ணீரை குளம், குட்டை, ஏரிகளில் சேமிக்க தக்க நடவடிக்கையை போர்க்கால அடிப்படையில் தமிழகமெங்கும் நடைமுறைப்படுத்த வேண்டும்.
3. நீர்வழித்தடங்கள்,நீர்ப்பிடிப்பு பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை பாரபட்சம் பார்க்காமல் உடனே அப்புறப்படுத்த வேண்டும்.
4. அனைத்து கார்ப்பரேட் கம்பெனிகள் (கோலா, பெப்சி போன்ற பல நிறுவனங்கள் ) நமது நிலத்தடி நீரை நிரந்தரமாக உறிஞ்ச தடைவிதிக்க வேண்டும்.
5. விவசாய நிலங்களில் உள்ள நிலத்தடி நீரை உறிஞ்சி, நகரங்களுக்கு மக்களுக்கு குடிநீர் கேன்களில் விற்பனை செய்வதை தடை செய்ய வேண்டும். மாற்றாக அரசு ஏற்கனவே குடிநீர் இணைப்புக்கள் மூலம் வழங்கும் குடிநீரை சுத்தமாக மக்கள் விரும்பி பயன்டுத்தும் வகையில் தக்க ஏற்ப்பாடு செய்ய வேண்டும்.
6. தண்ணீரின் அவசியம், சிக்கனமாக பயன்படுத்துவது எப்படி? தண்ணீர் பஞ்சம் வருவதை தடுப்பது எப்படி? இவைகளை பற்றி மக்கள் விழிப்புணர்வு மற்றும் சிந்திக்கும் வகையில் அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவைகளை பற்றி ஆராய்ச்சி செய்து மேம்படுத்த , பல்கலைக் கழகங்கள், மாணவர்கள், நிபுணர்கள் முன்வர வேண்டும்.
7. எதிர்காலத்தில் நம் தலைமுறையினர் சந்திக்கப்போகும் பெரிய பேராபத்துக்களில் முதன்மையானது தண்ணீர் பஞ்சம். நேற்று மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் தண்ணீர் பஞ்சம் , விவசாயிகள் தற்கொலை இன்று நம் கண் முன்னே நம் இடத்தில் நடக்கிறது.
8. தண்ணீர் மேலாண்மை மற்றும் மேம்பாட்டிற்கு , தனியே துறை மற்றும் அமைச்சகத்தை மத்திய, மாநில அரசுகள் உருவாக்கி, நிதியை ஒதுக்கி , திட்டங்களை தீட்டி செயல்படுத்த முன்வர வேண்டும்.
9. விவசாய பயன்பாட்டிற்க்கு தவிர மற்றவைகளுக்கு தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த மீட்டர் பொருத்தி , பயன்பாட்டிற்கு தகுந்தவாறு கட்டணம் வசூலிக்கும் முறையை நாடு முழுவதும் செயல்படுத்த வேண்டும்.
10. விவசாய பயன்பாட்டிற்கு தவிர மற்ற தேவைகளுக்கு போர்வெல் அமைக்க,நிலத்தடி நீரை எடுக்க வரைமுறைகளை வகுத்து ஒழுங்குபடுத்தி செயல்படுத்த வேண்டும்.
11. டெல்டா மாவட்டங்களில் நிலத்தடி நீர் பாதாளத்திற்கு சென்றதற்கு முக்கிய காரணம் . ஆற்றுப்படுகையில் உள்ள மணல் திட்டுகளை எல்லாம் மணல் மாபியாக்கள் சூறையாடியது தான் நமது அண்டை மாநிலமான கேரளாவில் மணல் அல்ல தடையை போல. நிரந்தரமாக தடை விதிக்க அரசு முன் வர வேண்டும்.
12. விவசாயிகளுக்கு நீர் நிறைய தேவைப்படும் நெல்,கரும்பு போன்றவைகளுக்கு மாற்றாக மற்ற குறைந்த நீரைக் கொண்டு பயிரிட தகுந்த பயிர்களை விளைவிக்க விவசாயிகளுக்கு விழிப்புணரவு மற்றும் மானியங்கள் போன்ற உதவிகளை செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும்.
13. அண்டை மாநிலங்களில் இருந்து தேவைப்படும் நீரை பெற தொடர்ந்து முயற்சிக்க வேண்டும்.
14. மழைக் காலங்களில் கடலில் வீணாய் கலக்கும் தண்ணீரை , சேமித்து பயன்படுத்தும் வண்ணம் புதிய அணைகள் , தடுப்பணைகள் , வீணாகும் தண்ணீரை ஏரி , குளங்களில் நிரப்புதல் போன்ற பல ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
15. வளைகுடா நாடுகளில் பாலைவனங்களிலேயே குறைந்த தண்ணீரை கொண்டு அனைத்து விவசாய பயிர்களை விவசாயம் செய்கின்றனர். அந்த தொழில் நுட்பங்களை நாம் இங்கே செயல்படுத்த முயற்சி செய்ய வேண்டும்.
மேற்சொன்ன விசயங்களை முயற்சித்தால் ஓரளவு தண்ணீர் பிரச்சினையை நாம் தீர்த்துவிடலாம்.
விவசாயிகளின் மரணத்திற்கு கடனும் முக்கிய காரணமாகிறது ..அதற்க்கு என்ன பண்ணலாம்.
1.விவசாயிகள் விவசாயத்திற்கு தேவையான விதை,இடுபொருட்கள், உரம் போன்ற அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய அதிக வட்டிக்கு கடன் வங்கிகள் மற்றும் தனியாரிடம் வாங்குகிறார்கள்.
2. உதாரணமாக ஒரு விவசாயி ஒரு டிராக்டர் வாங்கினால் அதற்க்கு வங்கிகள் அளிக்கும் வட்டிக்கும் , ஒருவர் கார் வாங்கும் போது அதே வங்கி அளிக்கும் வட்டியையும் ஒப்பிட்டு பாருங்கள் உங்களுக்கு புரியும்.
3. மத்திய, மாநில அரசு வழங்கும் மானியங்கள் , பயிர் காப்பீட்டு திட்டங்கள் , இழப்பீட்டு திட்டங்கள் , கடன் வழங்கும் திட்டங்கள் போன்றவை பற்றிய தக்க புரிதல் மற்றும் விழிப்புணர்வு விவசாயிகள் மத்தியில் இன்னும் இல்லை. இதை முதலில் சரிசெய்ய அரசும் ஊடங்கங்களும் முன்வரவேண்டும்.
4. நம்ம ஊடகங்கங்கள் விவசாயம் சார்ந்த விசயங்களை முன்னெடுத்து செல்ல முன்வரவேண்டும் ..விவசாயிகளுக்கு என்றே முழுநேரமும் இயங்க கூடிய ஊடங்களை அரசு (தொலைக்காட்சி, வாணொளி, பத்திரிக்கைகள்) அமைத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
5. ஒரு விவசாயி கடன் வாங்க நினைத்தால் அதை எளிய முறையில் விரைவில் கிடைத்திடத்தக்க வழிகளை அரசும் வங்கிகளும் இனைந்து உருவாக்க வேண்டும்.
6. அந்த கடன்களை விவசாயிகளால் திருப்பி செலுத்த முடியாத சூழல் ஏற்பட்டால் தக்க காரணம் இருந்தால் (உதாரணமாக தண்ணீர் பற்றாக்குறையால் பயிர்கள் கருகுதல், இயற்கை சீற்றங்களால் ஏற்படும் இழப்புக்கள் ) அந்த கடனை அரசே ஏற்கும் என்ற உத்திரவாதத்தை கடன் வாங்கும் போது வழங்க வேண்டும்.
7. மல்லையா, அம்பானி , அதானி போன்ற பெரும் தொழிலதிபதிகளின் பல லட்சம் கோடி கடனை வாராக்கடன் என்று வங்கிகளும் அரசும் அறிவித்து அவர்களை காப்பாற்றுவதை போல . விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்து விவசாயிகளை காப்பாற்ற அரசும் வங்கிகளும் தயங்ககூடாது.
8. விவசாயிகளின் விளைவிக்கும் பொருட்களுக்கு விவசாயிகளே ஒரு நல்ல விலையை நிர்ணயிக்கும் வண்ணம் வழிமுறைகளை ஏற்படுத்த வேண்டும். பெட்ரோல் , டீசல் விலையை தனியார் நிர்ணயிப்பதை போல . உதாரணமாக ஒரு தேங்காய் விலை பத்தாண்டுகளுக்கு முன்பு சுமார் 8 ரூபாய் இன்றும் அதன் விலை 8 ரூபாய் தான். பெட்ரோல் விலையை 10 வருடத்திற்கு முன்பு என்ன ? இப்ப என்ன என்று யோசித்த்துப்பாருங்கள் புரியும்.
9. அந்த பொருட்கள் இடைத்தரகர் இன்றி நேரடியாக விவசாயிகளுக்கும், நுகர்வோருக்கும் சென்றடையும் வகையில் தக்க ஏற்பாடுகளை செய்ய வேண்டும். உதாணரமாக ஒரு கிலோ தக்காளி விவசாயி ரூ.5 க்கு விற்றால், நுகர்வோர் கைக்கு சென்றடையும் போது அது சில நேரங்களில் ரூ.15 விற்கப்படுகிறது . ஆக வருடம் முழுவதும் அதை கடினமாக உற்பத்தி செய்யும் விவசாயி அடையும் பயனைவிட , அதிக பலனை யார் அடைகிறார்கள் என்று யோசித்த்துப்பாருங்கள் .
10. விவசாயிகள் தாங்கள் அதிகமாக விளைவிக்கும் பொருட்களை சேமித்துவைத்து அதை நல்ல விலை போகும் மற்றும் நுகர்வோர் தேவை அதிகம் இருக்கும் காலங்களிலும் விற்பனை செய்து பயனடையும் வகையில் அரசு சேமிப்புக்கிடங்குகளை உருவாக்கி கொடுக்க வேண்டும்.
11. விவசாயத்தை மேம்படுத்த விவசாயத்தில் ஆர்வமுள்ளவர்களை கொண்டு கூட்டு விவசாயம் செய்ய முன்வரவேண்டும். குழுவாக செயல்படும்போது நல்ல முன்னேற்றம் இருக்கும்.
12. இன்றைய விவசாயிகள் பசுமைப் புரட்சி என்ற பெயரில் விதை,உரம்,பூச்சிக்கொல்லி,களைக்கொல்லி என்று அனைத்தயும் கார்ப்பரேட் நிறுவனங்களின் பொருட்களை கடன் வாங்கி பயன்படுத்தும் சூழலுக்கு தள்ளப்பட்ட்னர் ..இந்த நிலை மாற நாம் பண்டைய முன்னோர்கள் வழியில் இயற்கை வழியில் விவசாயம் செய்ய விவசாயிகளை ஊக்குவிக்கும் வண்ணம் அரசு தக்க ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
13. அரசு ரசாயன உங்களுக்கும் பொருட்களுக்கும் மானியம் வழங்குவதை குறைத்து இயற்கை முறையில் விவசாயம் செய்யும் விவசாயிகளையும் ஊக்குவிக்கும்வண்ணம் மானியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க முன்வர வேண்டும்.
14. உதாரணமாக ஒரு நாட்டு பசு இருந்தால் ஏழு ஏக்கர் நிலத்தில் விவசாயம் இயற்கை முறையில் விவசாயம் செய்து நஞ்சில்லா உணவை உற்பத்தி செய்யலாம்.அதற்க்கு நல்ல வரவேற்பும் நுகர்வோரிடத்தில் உள்ளது.
15. இயற்கை விவசாயம் செய்ய முன்வருவதால் விவசாயிகள் கடன் வாங்க தேவை இல்லை.கடன் தொல்லையால் ஏற்படும் அவதியை தடுக்கலாம்.
16. விவசாயத்தில் ஈடுபட இளைஞர்கள் , பொதுமக்கள் மற்றும் ஆர்வலர்கள் முன்வர ஈடுபட முன்வர வேண்டும்.
மேற்க்கூறிய அனைத்தையும் அரசு , மக்கள் மற்றும் இந்த சமுதாயத்தில் உள்ள அனைவரும் ஒருங்கிணைந்து இதை விவசாயிகளின் பிரச்சனையாக மட்டும் பார்க்காமல் , அரசை மட்டும் குறை கூறாமல் .. ஒவ்வொரு தனிமனிதனும் தன்னால் ஆன முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் .
நீண்ட கால திட்டங்களாக நாடு முழுவதும் உள்ள நதிகளை இணைப்பது , தென்னக நதிகளை இணைப்பது , கடல் நீரை நன்னீராக மாற்றி விவசாயத்திற்கு பயன்படுத்துதல் போன்ற திட்டங்களில் அரசுகள் கவனம் செலுத்தினால் நலம்.
இந்த கட்டுரையில் இன்றைய விவசாயிகளின் மரணத்தை தடுப்பதற்கான வழிகள் உள்ளது என்று நீங்களும் நினைத்தால் , இதை மற்றவர்களுக்கும் பகிருங்கள்.
இதுவே நீங்கள் விவசாயிகளின் மரணங்களை தடுக்க எடுக்கும் முதல் படியாக அமையும் .

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.