சசிகலாவின் தலைமையை ஏற்க விரும்பாதவர்கள் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தலைமையில் இயங்க முடிவு செய்துள்ளனர். இதில் முன்னாள் மேயர் சைதை துரைசாமியும் தீபாவை ஆதரிப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகிய நிலையில் அதை முற்றிலும் மறுத்துள்ளார்.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு சசிகலா, அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராக பதவி ஏற்று கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தி வருகிறார். சசிகலாவின் தலைமையை ஏற்க விரும்பாதவர்கள் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து தினமும் அவரது வீட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து அதிருப்தி அ.தி.மு.க.வினர் வந்த வண்ணம் உள்ளனர். இதையடுத்து தீபா, விரைவில் அரசியலில் குதிப்பார் என்று அவரது ஆதரவாளர்கள் சொல்லி வருகின்றனர். தீபாவின் தலைமையில் இயங்க அதிருப்தி அ.தி.மு.க.வினர் ஆலோசனை கூட்டம் ஆங்காங்கே நடத்தி வருகின்றனர். தீபாவின் முடிவுக்காக அவர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் தீபாவிடம், பதவிகளை கேட்டும் மனுக்கள் கொடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து நம்மிடம் பேசிய தீபாவின் ஆதரவாளர்கள், "அம்மாவின் வாரிசான தீபாவின் தலைமையில் இயங்க உண்மையான அ.தி.மு.க.வினர் முடிவு செய்து விட்டனர். தீபாவின் முடிவுக்காக காத்திருக்கிறோம். சிலர் தீபா, தலைமையில் செயல்படும் அரசியல் இயக்கத்தில் பதவிகளை கேட்டு மனு கொடுத்துள்ளனர். முதலில் தீபா, வெளிப்படையாக அரசியலில் இறங்குவதாக அறிவித்தவுடன் தமிழகம் முழுவதும் பொது மக்களை சந்திக்க ஏற்பாடு செய்துள்ளோம். இந்த சுற்றுப்பயணத்தை முடித்த பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தீபாவுடன், அ.தி.மு.க.வில் உள்ள முக்கிய நிர்வாகிகள் பேசி வருகின்றனர். அவர்களுக்கும் சசிகலாவின் தலைமை பிடிக்கவில்லை. அதை வெளிப்படையாக சொல்ல முடியவில்லை. பதவியை காப்பாற்ற சசிகலாவின் பின்னால் செல்கின்றனர். மக்கள் மத்தியிலும், தொண்டர்கள் மத்தியிலும் தீபாவுக்கு செல்வாக்கு உள்ளது. சமீபத்தில் தீபாவுடன் முன்னாள் மேயர் சைதை துரைசாமி தரப்பிலிருந்து ஆதரவு தெரிவிக்கப்பட்டது. தீபாவுக்கு உறுதுணையாக இருப்பதாக அந்த தரப்பு தெரிவித்துள்ளது" என்றனர்.
இதுகுறித்து சைதை துரைசாமியிடம் கேட்டதற்கு, "இந்த தகவல் உண்மைக்கு புறம்பானது. என் தரப்பிலிருந்து தீபாவிடம் யாரும் பேசவில்லை. சின்னம்மா தலைமையில் அ.தி.மு.க செயல்படத் தொடங்கி விட்டது. நான் தீபாவுடன் கைகோர்த்ததாக வரும் செய்தி அரசியல் காழ்ப்பு உணர்ச்சி காரணமாக கிளப்பி விடப்படும் வதந்தி. நான் மாடி படிகட்டில் தவறி விழுந்ததால் ஓய்வில் இருக்கிறேன். அதனால்தான் கார்டன், கட்சி அலுவலகத்துக்கு வரவில்லை" என்றார்.
அ.தி.மு.க வட்டாரங்கள் கூறுகையில், "அம்மா உயிரோடு இருந்த காலகட்டத்திலேயே சைதை துரைசாமி கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்டு விட்டார். மேயரின் பதவிக்காலமும் முடிவடைந்து விட்டதால் அவருக்கு எந்த பொறுப்பும் இல்லை. சைதை துரைசாமியை சின்னம்மாவுக்கும் நன்றாகத் தெரியும். இதனால்தான் தீபா தரப்பில் அவர் பேசி இருக்க வாய்ப்புள்ளது. அவர் தரப்பினர் தீபாவுக்கு எல்லா வகையிலும் உதவிக்கரமாக இருப்பதாகவும் சொல்கின்றனர்" என்றனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.