Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 11, 2017

சென்னை: இந்தியா டுடே மாநாட்டில் சசிகலா!


இந்தியா டுடேயின் இரண்டு நாள் ஊடக மாநாடு சென்னை கிண்டியில் உள்ள ஐ.டி.சி. சோழா ஹோட்டலில் துவங்கியது. இதில் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக பொதுசெயலாளர் சசிகலா மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். மாநாட்டை குத்துவிளக்கேற்றி சசிகலா துவங்கி வைத்தார். மேலும், மாநாட்டில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படத்தையும் சசிகலா திறந்து வைத்தார்.


தென்னிந்தியாவில் முதல்முறையாக நடக்கும், இந்தியா டுடே மாநாட்டில் ஆறு மாநில முதல்வர்கள் கலந்து கொள்கின்றனர். மேலும் கமல்ஹாசன் உள்ளிட்ட திரை பிரபலங்களும் இந்த மாநாட்டில் கலந்து கொள்கின்றனர்.

இந்தியா டுடே மாநாட்டில் பேசிய முதல்வர் பன்னீர்செல்வம், 'நாட்டில் பொருளாதார வளர்ச்சியில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. தொழில் முதலீடு செய்வதில், தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது. தொழில்துறையில் அதிக வேலை வாய்ப்பை தரும் மாநிலமாக, தமிழகம் மாறி வருகிறது.  தமிழகம் தொழில்புரிய ஏற்ற மாநிலமாக இருப்பதாக, உலக வங்கியே பாராட்டியுள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீராக உள்ளது, ஜெயலலிதாவின் தொலைநோக்கு திட்டங்களால் தமிழகம் முன்னேறி வருகிறது' என்றார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.