பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள சசிகலா விரைவில் முதல்வராக மக்கள் பணியாற்றுவார் என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் புத்தாண்டை முன்னிட்டு ஏராளமான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். ஜெ. நினைவிடத்தில் அமைச்சர்கள் பி.தங்கமணி, ஓ.எஸ்.மணியன், ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் ராஜூ, சேவூர் ராமச்சந்திரன் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்தினர்.
அப்போது, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
''சசிகலா அதிமுகவின் புதிய தலைமை அல்ல. தொண்டர்களால் ஏற்கெனவே அறிந்த தலைமைதான். அவர் பொதுச் செயலாளராக பதவியேற்றுக் கொண்டதின் மூலம் அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
சசிகலா திறம்பட பணியாற்றுவார். அவரது தலைமையின் கீழ் அதிமுக மேலும் சிறப்பான வளர்ச்சியடையும். அதிமுக தொண்டர்கள் மட்டுமின்றி தமிழகத்துக்கும் சசிகலா பாதுகாப்பாக இருப்பார். சாதி, சமய வேறுபாடுகள் இல்லாமல் கட்சியை நடத்திச் செல்வோம் என்ற உறுதிமொழியை அவர் எடுத்துள்ளார், அவருக்கு உண்மை தொண்டர்கள் துணையாக இருப்பார்கள்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவைப் போல், தற்போது பொதுச் செயலாளராகியுள்ள சசிகலா, விரைவில் ஆட்சிப் பொறுப்பேற்க வேண்டும் என தொண்டர்கள் விரும்புகின்றனர். அதை ஏற்று விரைவில் முதல்வராக மக்கள் பணியாற்றுவார்'' என்றார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.