Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 6, 2017

'கணவரை முழு நேர கேப்டனாக தந்தீர்கள்!' - சாக்‌ஷி தோனிக்கு நன்றி


இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி, ஒருநாள் மற்றும் டி 20 போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து விலகி அவரது ரசிகர்களை பெரும் சோகத்துக்கு உள்ளாக்கியிருக்கிறார். இதுதான் நேற்றைய ஹாட் ட்ரெண்டிங் டாப்பிக். அவருடைய இந்த முடிவுக்கு கிரிக்கெட் வீரர்கள் தொடங்கி பல பிரபல ஜாம்பவான்கள் வரை ட்விட்டரில்  தோனியின் புகழைப் பாட, தோனியின் மனைவி சாக்‌ஷி, அழகான, கம்பீரமான ட்வீட்டை ட்வீட்டி ரசிகர்களின் மனதில் நின்றிருக்கிறார்.

'நீங்கள் உயரே செல்வதை, எவ்வளவு பெரிய மலை சிகரங்களாலும் ஈடுகட்ட முடியாது' என, பல இதய வடிவ எமோடிகான்களுடன் சொல்லும் அவரின் ட்வீட் அத்தனை அழகு. தோனியின்  பல வெற்றிகளிலும், சர்ச்சைகளின்போது உடன் இருந்து வந்தவர் சாக்‌ஷி.

சாக்‌ஷி, தோனியை போல செம்ம கூல் என்பார்கள். 2015 உலகக் கோப்பையின்போது சாக்‌ஷிக்கு குழந்தை பிறக்க, தோனியோ ஆஸியில் பிஸியான பேட்ஸ்மேனாக பந்தாடிக் கொண்டிருந்தார். 'ஐயம் ஆன் நேஷனல் டியூட்டி' என்று தோனி கூற, அவரின் அந்தப் பொறுப்பை உணர்ந்து, சூழலை சாக்‌ஷி அழகாக உள்வாங்கிக்கொண்டது, அவர்களுக்கு இடையேயான புரிதலை உலகுக்கு சொன்ன தருணம்.



பொதுவாக, பிரசவ நேரத்தில் தன்னைச் சுற்றியிருக்கும் அத்தனை சொந்தங்களைவிடவும், தன் கணவரின் கைகளைப் பற்றிக்கொள்ளதான் ஒவ்வொரு பெண்ணும் துடிப்பாள். அப்படி ஒரு பெண்ணாக சாக்‌ஷி இருந்திருந்தால், நாம் அருமையான கேப்டனை மிஸ் செய்திருப்போம், கூடவே பல வெற்றிகளை. ஆனால் தோனியின் கனவுகளுக்காக தன் சந்தோஷங்களை, கனவுகளை கரையவிட்டார் சாக்‌ஷி. தன் கணவரை, அந்த ஸ்தானத்துக்குரிய பொறுப்புகளால் இறுக்காமல், ரசிகர்களுக்கு முழுநேர கேப்டனாகத் தந்தார்.

2014ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் தன் எண்ணத்தை, சக வீரர்களுக்கு அறிவிக்கத் தயங்கிய தோனியின் பின்னால் பலத்தோடு நின்றது சாக்‌ஷி மட்டுமே. அதன் பிறகே தன் சக வீரர்களுக்கு தன் ஓய்வை அறிவித்தார் தோனி. இக்கட்டான சூழ்நிலைகளில் கணவருடன் இருந்ததுடன், தோனிக்குக் கிடைத்த கொஞ்சமே கொஞ்சம் 'ஃபேமிலி டைம்'களில் தன் குடும்பத்தின் சந்தோஷத்தை குறையாத காதலோடு தக்கவைத்துக் கொண்டார்.

தோனியின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டபோது, அதில் சாக்‌ஷியின் கேரக்டரை அப்படியே பிரபதிலிக்க வைக்க அதிக சிரமப்பட்டார்களாம். காரணம், உண்மையான சாக்‌ஷியை திரையில் பிரதிபலிப்பது அத்தனை கடினம் என்பதுதானாம்.

தோனியின் மனைவியாக இருக்கும்போது லைம்லட்டில்தான் இருந்தாக வேண்டும். தன்னுடைய ப்ரைவசிகளையோ, ஆசாபாசங்களையோ பொதுவெளிகளில் காட்டிக்கொள்ள முடியாது. ஆனால் அதையெல்லாம் புன்னகையோடு, குட்டிக் கண்களோடு எதிர்கொண்ட சாக்‌ஷி, சிறந்த தாயாகவும், மிகச் சிறந்த மனைவியாகவும் பரிமளித்தார்.

தோனிக்களின் பலம் சாக்‌ஷிகளும்தான்!

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.