Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 1, 2017

ரூபாய் நோட்டு தொடர்பான அவசரச் சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்


பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் தொடர்பான அவசரச் சட்டத்திற்கு குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.

மத்திய அரசால் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மார்ச் 31-ஆம் தேதிக்குப் பின் வைத்திருத்தல் சட்டப்படி குற்றமாகும். இத்தகைய ரூபாய் நோட்டுகளை வைத்திருந்தாலோ, பிறருக்கு வழங்கினாலோ, பிறரிடம் இருந்து பெற்றாலோ அபராதம் விதிக்க அவசரச் சட்டம் வழி செய்கிறது. இந்நிலையில் இந்த அவசரச் சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.

இதனிடையே, பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை வைத்திருக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஜூன் 30-ஆம் தேதி வரை குறிப்பிட்ட ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் செலுத்தி மாற்றிக் கொள்ளலாம் என்று மத்திய நிதித்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.