ஜல்லிக்கட்டு நடத்த தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், தடையை நீக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்நிலையில், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு திரட்டும் வகையில் இரு சக்கர வாகன விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்ட பெண் உள்ளிட்டோரை போலீஸார் கைது செய்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, இரண்டாயிரம் கிலோ மீட்டர் தூரம் இருசக்கர வாகன பிரசாரப் பயணத்தை புதுச்சேரியைச் சேர்ந்த மகேஸ்வரி கடந்த 2ம் தேதி துவக்கினார். புதுச்சேரியை சேர்ந்த மகேஸ்வரி, எம்.பி.ஏ. படித்தவர். மோட்டார் பைக் வீரர்.
இவர் நமது பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை பாதுகாக்க வலியுறுத்தியும், தமிழர் பண்பாடு, கலாச்சாரத்தை மீட்டெடுக்கவும், பாரம்பரிய நாட்டு மாடு இனங்களின் எண்ணிக்கையை பெருக்கவும், காட்சிப்படுத்தாத வன விலங்குகள் பட்டியலில் இருந்து காளையை நீக்கக் கோரியும் தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் விழிப்புணர்வு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு, கடந்த 2ம் தேதி பயணத்தை பாண்டிச்சேரியில் இருந்து துவக்கினார்.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று ஈரோடு, கோவை வழியாக இன்று மதுரை வந்தார். மதுரை ஜல்லிக்கட்டுக்கான களம் என்பதால் மதுரையில் இவரை ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் வரவேற்றனர். மதுரையிலிருந்து அலங்காநல்லூர் வாடிவாசலுக்கு சென்ற மகேஸ்வரியுடன், அங்குள்ள இளைஞர்களும் இரு சக்கர வாகனத்தில் கிளம்பினர்.
அலங்காநல்லூருக்குள் நுழைவதற்கு முன்னர் சென்ற போது மகேஸ்வரியை போலீஸார் கைது செய்தனர்.அவருடன் சென்ற இளைஞர்களும் கைது செய்யப்பட்டனர். அனுமதியின்றி ஊர்வலம் செய்ததாக அவர் கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். இவர்கள் அனைவரும் திருமண மண்டபத்தில் காவல் வைக்கப்பட்டனர்.

இந்த தகவல் பரவியதையடுத்து, ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களும், நாம் தமிழர் கட்சியினரும் அங்கு குவிந்தனர். கைது செய்யப்பட்டவர்கள் அனைவரையும் விடுவிக்கக் கோரி அவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களையும் போலீஸார் கைது செய்து, மண்டபத்தில் அடைத்தனர்.
கைது செய்யப்பட்ட மகேஸ்வரி உள்ளிட்டோ விடுவிக்கப்படுவார்களா என்பதை போலீஸார் தெளிவுபடுத்தவில்லை. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து வாகனப் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பெண் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.