January 11, 2017
சரி இனி கர்நாடக தான் தமிழனுக்கும் தமிழ் நாடு க்கும் தலைமை OK வா தமிழா
டெல்லியில் நடைபெற்ற பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தின் போது தமிழக அரசியல் நிலவரம் குறித்து அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா குறித்தும் விசாரித்துள்ளார்.
தமிழக முதல்வராகவும், அதிமுக பொதுச்செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5-ம் தேதி காலமானார்.
அதைத் தொடர்ந்து முதல்வராக ஓ.பன்னீர்செல்வமும், அதிமுக பொதுச்செயலாளராக சசிகலாவும் பொறுப்பேற்றனர்.
முதல்வராகவும் சசிகலா விரைவில் பொறுப்பேற்க இருப்பதாக தகவல்கள் வரு கின்றன.
இதற்கிடையே, சசிகலா தலைமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவில் சிலர் குரலெழுப்பி வருகின்றனர்.
அவர்கள், சென்னை தி.நகரில் உள்ள ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா வீட்டுக்கு தினமும் சென்று அவரை அரசியலுக்கு வருமாறு அழைப்பு விடுக்கின்றனர்.
அவர்களிடம், விரைவில் தனது அரசியல் பிரவேசம் குறித்து அறிவிக்க இருப்பதாக தீபா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 6, 7 தேதிகளில் டெல்லியில் பாஜக தேசிய செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
அதில் தமிழகத்தின் சார்பில் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம், மாநிலங்களவை உறுப்பினர் இல.கணேசன், தேசிய செயலாளர் எச்.ராஜா, தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.
அப்போது ஜெயலலிதா மறைவால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் குறித்து தமிழக நிர்வாகிகளுடன் அமித் ஷா தனியாக ஆலோசனை நடத்தியுள்ளார்.
இதில் தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் ராம்லால், பொதுச் செயலாளர் பி.முரளிதர ராவ், இணை அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் ஆகி யோர் பங்கேற்றுள்ளனர்.
முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா ஆகியோரின் செயல்பாடுகள் குறித்து விசாரித்த அமித்ஷா, தீபா பற்றியும் அவரது வீட்டில் திரண்டு வரும் தொண்டர்கள் கூட்டம் குறித்தும் கேட்டறிந்துள்ளார்.
தீபாவின் வீடு முன்பு தொண்டர்கள் குவிந்து வருவது குறித்தும், அவருக்கு உதவி செய்பவர்கள், தொண்டர்கள் மத்தியில் உள்ள ஆதரவு குறித்தும் கேட்டதுடன் அவரது பின்னணி, கடந்தகால செயல்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தார்.
பின்னர் பிரதமர் மோடியுடன் கலந்து ஆலோசித்த அமித்ஷா, சசிகலாவிற்கு கடும் எதிர்ப்பு நிலகிறது. தீபா புதிதாக மக்களுக்குத் தெரிகிறார்.
மக்களுக்கும் ஜெ.வின் ரத்த உறவுகள் மீது விசுவாசமும் அனுதாபமும் இருக்கும். எனவே ஆட்சியைக் கலைத்துவிட்டு தீபாவை களமிறக்கி கூட்டணி வைக்கலாம் என்று கூறினாராம்.
மோடி கிட்டத்தட்ட க்ரீன் சிக்னல் காட்டி விட்டார் என்கிறார்கள். அப்படிப் போடு
சரி இனி கர்நாடக தான் தமிழனுக்கும் தமிழ் நாடு க்கும் தலைமை OK வா தமிழா
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
January 11, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
January 11, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.