Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 11, 2017

ஹலோ செல்ஃபி கிங்/குயின்.. உங்களுக்கு அது வந்திருச்சு!


உங்ககிட்ட ஸ்மார்ட்போன் இருக்கா? அதுல செல்ஃபி எடுக்குற பழக்கம் இருக்கா? ஒரு நாளைக்கு எத்தனை போட்டோ எடுப்பீங்க? அந்த போட்டோஸை நண்பர்களுக்கு அனுப்பி கருத்து கேட்குற பழக்கம் இருக்கா? அப்போ கொஞ்சம் கவனமா செயல்பட வேண்டிய நேரம் இது. செல்ஃபி எடுக்குறது ஒரு போதைப்பழக்கம் போன்றதுனு நாம கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அதுக்காக ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணி ட்ரீட்மெண்ட் கொடுக்கணும்னு சொன்னா நம்புவீங்களா? இந்த மாதிரி  பிரச்னைக்கு ‘செல்ஃபிசைடு’ங்குற பெயர் பயன்படுத்தபடுகிறது.

'செல்ஃபிசைடு' (Selficide) என்றால் என்ன?

தொடர்ச்சியாக கவனத்தை ஈர்க்கும்படி போட்டோக்களுக்கு போஸ் கொடுத்து, அதை மொபைல் போனில் படமாக எடுத்து, நண்பர்களுக்கு பகிர்வது, அப்படி பகிர்ந்த போட்டோக்களுக்கு நண்பர்களிடம் இருந்து கருத்து கேட்பதே செல்ஃபிசைடு என்று சொல்லப்படுகிறது. இந்தப் பிரச்னை உள்ளவர்கள் அடிக்கடி கண்ணாடி பார்ப்பது, அவ்வப்போது செல்ஃபி எடுப்பது போன்றவற்றில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். அப்படிப்பட்டவர்களை செல்ஃபி எடுக்கும்போது தொந்தரவு செய்தால் மிகவும் கோபப்படுவாங்க... உணவு, தூக்கமின்றி போட்டோக்கள் எடுத்துக் கொண்டே இருப்பாங்க..

செல்ஃபிசைடால் பாதிக்கப்பட்ட பெண்கள்

கடந்த இரண்டு மாதங்களில் மூன்று பெண்கள், செல்ஃபிசைடால் பாதிக்கப்பட்டு, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டெல்லி பல்கலைக்கழத்தில் படிக்கும் 18 வயதான ஸ்வேதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) காது,மூக்கு,தொண்டை நிபுணரிடம் மூக்கு அறுவைச் சிகிச்சைக்காக எய்ம்ஸ் மருத்துவமனை சென்றுள்ளார். பரிசோதனைக்குப் பிறகு, மூக்கில் எந்தப் பிரச்னையும் இல்லை என்று கூறியுள்ளார். இதையடுத்து, அந்த மருத்துவர் அந்தப் பெண்ணை மனநல மருத்துவரிடம் நிபுணரிடம் அனுப்பியுள்ளார். இதுபோன்ற பிரச்னை என்று மருத்துவமனையை அணுகியவர்களில், ஸ்வேதா முதல் பெண் அல்ல. ஏற்கெனவே, 2 பெண்கள் இதே பிரச்னையைக் குறிப்பிட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எய்ம்ஸ் மருத்துவமனை தவிர, வேறு தனியார் மருத்துவமனையில், இதே பிரச்னையால் 3 பெண்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எய்ம்ஸில் அனுமதிக்கப்படுள்ள பெண்கள் மூவருமே வெளித்தோற்றத்தில் பார்ப்பதற்கு மிகவும் கர்வத்தோடு இருந்துள்ளனர். அவர்கள் தங்களது உடல் அழகைத் தெரிந்து கொள்வதற்காக, அடிக்கடி செல்ஃபி எடுத்து வந்திருப்பது தெரிய வந்துள்ளது. அந்த ஆர்வமே, அவர்களுக்கு இதுபோன்ற பிரச்னை ஏற்படக் காரணமாகியது. ஸ்வேதாவை பரிசோதனை செய்த டாக்டர் நந்தகுமார் கூறுகையில், “அவர் பதிவேற்றும் புகைப்படங்களுக்கு ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் எந்த மாதிரியான வரவேற்பு இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வதில் அதிக ஆர்வம் காட்டியுள்ளார். செல்ஃபி மோகத்தால் கல்லூரி வகுப்புகளைக் கூட அவர் பல நாட்கள் தவிர்த்துள்ளார். புதிய வாழ்க்கை முறையை பின்பற்றுபவர்களை இந்த பிரச்னை அதிகம் தாக்குகிறது. அந்தப் பெண்ணுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என்றார்.

செல்ஃபிசெல்ஃபி

மொபைலில் அதிகம் மூழ்கியிருப்போருக்கு அதீத கோபம், வெறுப்பு, தூக்கமின்மை, பதற்றம், தலைவலி, மன அழுத்தம் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. சிலர் தங்களுக்கு கோபம், தனிமை உணர்வு, மன அழுத்தம் போன்றவை ஏற்படுவதற்கான காரணம் என்னவென்று தெரியாமல் தவிக்கிறார்கள். ‘அமெரிக்க மனோதத்துவ சங்க’ ஆய்வின்படி, 60 சதவிகிதம் அளவுக்கு பெண்களே இந்த பிரச்னைக்கு ஆளாகி உள்ளார்கள் என்று தெரிய வந்துள்ளது.

செல்ஃபி என்ற பெயரில் எந்த கோணத்தில் புகைப்படம் எடுக்கிறோம் என்ற தீவிரத்தை உணராமல், சில பெண்கள், தங்களை சிறுமைப்படுத்தக்கூடிய வகையில் மிகமோசமான புகைப்படங்களை எடுப்பதுடன், அவற்றை தோழிகளுக்கும், காதலனுக்கும் உணர்ச்சிவசப்பட்டு அனுப்பி விடுகிறார்கள். தெரிந்தோ தெரியாமலோ அதுபோன்ற புகைப்படங்கள், மற்றவர்களுக்கும் பரவக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்தி விடுகிறது. அப்போதுதான் தாங்கள் செய்தது தவறு என்று அந்தப் பெண்கள் உணர்கிறார்கள். ஆனால், தங்களின் மோசமான புகைப்படம் சமூகவலை தளங்களிலோ அல்லது இணைய தளத்திலோ பரவுவதால், சம்பந்தப்பட்ட பெண்கள், மிகுந்த மன உளைச்சலை எதிர்கொள்கிறார்கள். முன்பெல்லாம் முகம் பார்க்கும் கண்ணாடி முன்பு அதிகநேரம் நின்று கொண்டிந்தவர்கள், தற்போதைய கால கட்டத்தில், நினைத்த இடத்தில், நினைத்த நேரம் மொபைல் போனில் செல்ஃபி எடுத்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

போட்டோக்கள் எடுப்பது தவிர்க்க முடியாத ஒன்றுதான். நம்முடைய அழகை நாமே பார்த்துக் கொள்ள ஓரிரு போட்டோக்களை எடுத்துக் கொள்ளலாம். ஆனால், அதுவே  மோசமான பழக்கமாக‌ மாறிவிடாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அதிலும் சிலர், விபரீத செல்ஃபிக்கள் எடுக்கும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர். அதுபோன்ற பழக்கம் சில நேரங்களில் விபத்தாக மாறி, நம் வாழ்க்கையையே விபரீதமாக்கி விடும் பேராபத்து உண்டு என்பதை உணர வேண்டும். எனவே., அளவோடு புகைப்படம் எடுத்துக் கொள்வோம். செல்ஃபிசைடு பாதிப்பிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்வோம்!

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.