மதுரை : திமுக ஆட்சியில் இருந்திருந்தால் ஜல்லிக்கட்டு நடத்தும் சூழலை உருவாக்கியிருப்போம் என அலங்காநல்லூரில் நடந்த ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வலியுறுத்தும் ஆர்ப்பாட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார்.
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வலியுறுத்தி, தி.மு.க.சார்பில் அலங்காநல்லுரில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மக்கள் திரண்டு வந்துள்ளனர். அதிலும் குறிப்பாக இளைஞர்கள் அதிகமாக வந்துள்ளனர். வருகிற பொங்கல் திருநாளில் ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டுமென்று நானும் உங்களைப்போல ஆர்வமுடன் காத்திருக்கிறேன். அதனால்தான் தமிழரின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை அனுமதியுங்கள் என்று உங்களுடன் சேர்ந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறேன். ஜல்லிக்கட்டு நடக்கும் என பி.ஜே.பி.யினர் உறுதியாக சொல்கிறார்கள். ஆனால், அவர்களின் வாக்குறுதி நிறைவேற்றப்படுமா என்பது சந்தேகமாக உள்ளது. வாக்குறுதி என்றால் அது கலைஞர்தான். அவர் சொன்னதை செய்வார், செய்வதை சொல்வார்.

தி.மு.க.ஆட்சியில் 2010 ல் உச்ச நீதிமன்றம் இதேபோல ஜல்லிக்கட்டுக்கு தடை போட்டது, அப்போது தடையை தகர்த்தெறிய சட்ட ஆலோசனை செய்து, சில நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டு நடத்த சட்டம் இயற்றப்பட்டது. இந்த பெருமை தி.மு.க.வுக்கு உண்டு. 2011 ல் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்புதான் ஜல்லிக்கட்டுக்கு தடை ஏற்பட ஆரம்பித்தது. இதை தடுக்க அ.தி.மு.க. அரசு தவறிவிட்டது. ஒரு அவசரச் சட்டத்தை கொண்டு வரலாம் என்று நீதிபதி கட்ஜு சொன்ன கருத்தை தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை.
மத்தியில் இருக்கிற தமிழக அமைச்சரும், தமிழக பி.ஜே.பி. நிர்வாகிகளும் தி.மு.க.வும் காங்கிரசும் ஆட்சியில் இருந்த போதுதான் ஜல்லிக்கட்டுக்கு தடை போட்டதாக பழி போடுகிறார்கள். தி.மு.க.ஆட்சியில்தான் ஜல்லிக்கட்டு நடந்தது. இப்போது ஐம்பது எம்.பி.க்கள் அ.தி.மு.க.வில் உள்ளனர். இவர்கள் என்றாவது ஜல்லிக்கட்டு பிரச்னையை நாடாளுமன்றத்தில் எழுப்பியிருக்கிறார்களா?

இன்னும் 11 நாட்களில் பொங்கல் வரப்போகிறது. கடந்தமுறை ஓ.பி.எஸ். முதல்வராக இருந்தபோது ஜல்லிக்கட்டு நடக்கும் என்று வாக்குறுதி கொடுத்தார். நாளைக்கு முதல்வராக நீடிப்பாரா என்பது தெரியாவிட்டாலும் இப்போதும் அவர்தான் முதல்வராக இருக்கிறார். அவர் ஜல்லிக்கட்டை நடத்த நடவடிக்கை எடுப்பாரா?
கடந்த ஐந்து ஆண்டுகள் அ.தி.மு.க.தான் ஆட்சியில் இருந்தது. இப்போதும் இருக்கிறார்கள். அ.தி.மு.க.ஆட்சியென்பது காட்சிப்பொருளாகத்தான் இருந்தது. அதற்காக ஜல்லிக்கட்டு காளைகளையும் காட்சிப்பொருளாக்கி விடாதீர்கள். தமிழரின் பண்பாட்டுடன் கலந்த, ஜல்லிக்கட்டை நடத்த மத்திய அரசு முன்வரவேண்டும். இது தி.மு.க.,அ.தி.மு.க.வுக்கு இடையேயான பிரச்னை அல்ல. ஒட்டுமொத்த தமிழர்களுக்குமான பிரச்னை. திமுக ஆட்சியில் இருந்திருந்தால் ஜல்லிக்கட்டு நடத்தும் சூழலை உருவாக்கியிருப்போம்," இவ்வாறு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.