Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 1, 2017

மூன்றாவது மாதமாக முடங்கிய மணிப்பூர்!


மணிப்பூரில் புதிதாக ஏழு மாவட்டங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஐக்கிய நாகா அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். நவம்பர் 1-ம் தேதி முதல் தேசிய நெடுஞ்சாலைகளில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், பொருளாதாரம் முடங்கியுள்ள நிலையில் அங்கு போராட்டத்தை தீவிரப்படுத்த நாகா அமைப்பினர் முடிவு செய்துள்ளனர்.

மேலும், அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தவும் நாகா அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கிடையே நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர அங்கு மத்திய படைகள் அனுப்பப்பட்டது. குறிப்பாக, நாகா அமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தி, அங்கு விரைவில் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.