இறைவழிபாடாக இருந்தாலும் சரி, பெரியோரை வணங்கும் விருந்தோம்பலாக இருந்தாலும் சரி, எலுமிச்சைக்கு தமிழர் அளித்திருக்கும் இடம் பெரிது. மஞ்சள், வேம்புபோல எலுமிச்சைக்கும் நம் மருத்துவ மரபில் பெரும் பயன் இருந்திருக்கிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கு மிக அத்தியாவசியமான வைட்டமின் சி சத்து, எலுமிச்சையில் இருப்பது நமக்குத் தெரியும். ஆனால், வாந்தி, தலைசுற்றல், உயர் ரத்த அழுத்தம் காரணமாக வரும் தலைவலி, மயக்கம் போன்ற பல பிரச்னைகளுக்கும் எலுமிச்சை மருந்து என்பது பலருக்கும் தெரியாத விஷயம்.
`மந்திரிக்கு மந்திரியாக, மன்னனுக்கு மன்னனாக, தந்திரிக்கு மித்திரனாக...’ என விடுகதையாக சித்தர் தேரன் மருந்து பாரதத்தில் பாடியிருக்கும் பழம் எலுமிச்சை. அதாவது, `மந்திரி’ எனும் `பித்தம்’ அதிகரித்துவரும் நோய்க்கு அரசவையின் மந்திரிபோல் சமயோசிதமாக உடலுக்கு வேறு பிரச்னை எதுவும் வராமல், பக்கவிளைவு இல்லாமல் தணிக்கும் ஆற்றல் கொண்டது; உடலின் மன்னனான `வாதத்தை’, சரியாக நிர்வகிக்கும் மன்னனாக இருக்கிறது; தந்திரமாக உடலில் சேரும் `கபத்துக்கு’ மித்திரனாக (நண்பனாக) இருந்து அதை வெளியேற்றும் இயல்புகொண்டது. `இந்த மூன்று பணிகளையும் செவ்வனே செய்யும் இது’ எனக் கவித்துவத்துடன் சொல்கிறார் சித்தர் தேரன்.
இனிக்க இனிக்க எலுமிச்சையின் பலன்கள்!

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.