ஜல்லிகட்டு நடத்த கட்டுப்பாடு களுடன் கூடிய அனுமதியை நீதிமன்றம் அளிக்குமென எதிர் பார்ப்பதாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது: சசிகலா அதிமுக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளது அந்த கட்சியின் உள்விவகாரம். நாளை சசிகலா முதல்வராகவும் வாய்ப்புள்ளது. ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், வரும் ஜனவரியில் தீர்ப்பு வரும் என எதிர்பார்க்கிறேன்.
கறுப்புப் பணத்தை மீட்க மத்திய அரசு மேற்கொண்ட முயற்சியை விமர்சனம் செய்யும் காங்கிரஸ் கட்சியினர், ஏன் அவர்கள் ஆட்சிக் காலத்தில் இந்த நடவடிக்கையை எடுக்கவில்லை. கறுப்புப் பணத்தை ஓழிக்க பிரதமர் மோடி மேற்கொண்ட நடவடிக்கையில் மத்திய நிதி அமைச்சகம் சரியாகத் திட்டமிடவில்லை. ஆனால் அதை சரி செய்ய மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
புதிய தலைமை
தமிழக பாஜகவுக்கு புதிய செயற்குழு, பொதுக்குழு போன்ற அமைப்புகளை உருவாக்க வேண்டும். தமிழக பாஜகவுக்கு புதிய தலைமை தேவைப்படுகிறது. ஜன.6 மற்றும் 7-ம் தேதிகளில் நடக்கும் தேசிய பொதுக்குழுக் கூட்டத்தில் இதை பரிசீலிக்க வேண் டும். தமிழகத்தில் தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில், புதிய அரசியல் அமைப்பாக பாஜகவுக்கு வாய்ப்புள்ளது.
ஜல்லிக்கட்டு போட்டிகளில் இதுவரை எந்த காளைகளும் உயிரிழக்கவில்லை என எனது வாதங்களை உச்ச நீதிமன்றத்தில் முன்வைத்துள்ளேன். ஜல்லிக்கட்டு விவகாரத்தில், நீதிமன்றம் கட்டுப் பாடுகளுடன் கூடிய அனுமதி அளிக்க வாய்ப்பளிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.