அ.தி.மு.க பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதா மரணம் தொடர்பாக, சசிகலா புஷ்பா கொடுத்த மனுவை சி.பி.ஐயின் நிர்வாக அமைப்புக்கு அனுப்பியிருக்கிறது மத்திய உள்துறை அமைச்சகம். ' ஜெயலலிதா மீண்டும் வந்துவிடக் கூடாது என்பதற்காக, திட்டமிட்டு நடத்தப்பட்ட சதியாகவே பார்க்கிறோம்' என்கிறார் சசிகலா புஷ்பா எம்.பி.
மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சில நாட்களுக்கு முன்பு சந்தித்தார் அ.தி.மு.கவின் மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா. ' ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் உள்ளதால், மத்திய புலனாய்வு அமைப்பின் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' எனக் குறிப்பிட்டிருந்தார். அடுத்ததாக, பா.ஜ.க தேசியத் தலைவர் அமித் ஷாவை சந்தித்து, தமிழக அரசியல் சூழல்கள் குறித்து விவாதித்தார். இந்த நடவடிக்கைகளை அச்சத்தோடு கவனித்து வந்தது கார்டன் வட்டாரம். தற்போது, சி.பி.ஐயின் நிர்வாக அமைப்பான பணியாளர் நலன் மற்றும் பயிற்சித் துறைக்கு சசிகலா புஷ்பாவின் மனுவை அனுப்பியிருக்கிறது உள்துறை அமைச்சகம். ' ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதற்கான அடிப்படை முகாந்திரம் இருந்தால், வழக்கை சி.பி.ஐ விசாரிக்கும்' என உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்ட நாளில், உயர் நீதிமன்ற நீதியரசர் தெரிவித்த கருத்துகளும் தற்போது உள்துறையின் அதிரடிகளும் அ.தி.மு.க சீனியர்களை கவனிக்க வைத்துள்ளது.
" பொதுச் செயலாளர் பதவிக்குப் போட்டியிடுவதற்காக விண்ணப்பம் வாங்கச் சென்ற, சசிகலா புஷ்பாவின் கணவர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டது. எந்தவிதத் தேர்தலும் இல்லாமல், பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டார் சசிகலா. கழகத்தின் விதிகளைக் கடைபிடிக்காமல்தான் பதவிக்குக் கொண்டு வரப்பட்டார். எப்படி இருந்தாலும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பதில் சொல்ல வேண்டிய கடமை, சசிகலாவுக்கு இருக்கிறது. மருத்துவமனையில் இருந்த 75 நாட்களும், அவரைச் சுற்றி என்ன நடந்தது என்பதை தொண்டர்களுக்கும் பொதுமக்களுக்கும் தெரிவிக்க வேண்டிய கடமை, அவரைச் சுற்றியிருந்தவர்களுக்கு இருக்கிறது. அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும், இந்தக் கேள்விகளை எழுப்பியபோதும் சசிகலாவிடம் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை. எனவேதான், மத்திய உள்துறையின் கவனத்துக்குக் கொண்டு செல்ல வேண்டியதாகிவிட்டது" என விவரித்த சசிகலா புஷ்பாவின் ஆதரவாளர் ஒருவர், தொடர்ந்து நம்மிடம், " ஜெயலலிதா மரணம் தொடர்பாக, சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கும்போது சில ஆதாரங்களை வழங்க இருக்கிறார் சசிகலா புஷ்பா. முதலாவதாக, 2011-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஆறே மாதத்தில், சசிகலா மற்றும் அவருடைய உறவினர்களை கட்சியில் இருந்து நீக்கினார். 'ஆட்சிக்கு எதிராக சதித் திட்டம் தீட்டப்பட்டது' எனக் கொந்தளித்தார் ஜெயலலிதா. அடுத்து வந்த நாட்களில் நடராஜன், திவாகரன் மீது வழக்குப் பதியப்பட்டது. அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் மூன்று மாத கால இடைவெளியில் மீண்டும் கார்டனுக்குள் சேர்த்துக் கொள்ளப்பட்டார் சசிகலா. ஆனால், 'அவருடைய உறவினர்கள் நீக்கம் தொடரும்' என அறிவித்தார்.

அதன்பிறகு, கார்டனில் இருந்து கொண்டே, ஜெயலலிதாவுக்கு எதிராக படிப்படியான சதித் திட்டங்கள் தீட்டப்பட்டன. அதன் இறுதிக் கட்டமாகத்தான், உடல்நலக் குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஜெயலலிதா. 'எப்படிப்பட்ட சூழலில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்' என்பதை இதுவரையில் சசிகலா தெரிவிக்கவில்லை. மருத்துவமனையில் இருந்த நாட்களில், அவரால் நீக்கப்பட்டவர்கள், மருத்துவமனைக்கு வந்து போய்க் கொண்டிருந்தனர். இறுதிவரையில், அவருடைய உடல்நிலை குறித்த சரியான தகவல் பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை. 'வெளிநாட்டுக்கு அழைத்துப் போய் சிகிச்சை அளிக்க வேண்டும்' என்ற கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது. குறிப்பாக, மருத்துவமனையில் ஜெயலலிதா இறப்புக்கு முந்தைய இரண்டு நாட்களும் என்ன நடந்தது என்பதற்கு உறுதியான காரணங்கள் இல்லை. 'அவரைக் காப்பாற்ற முடியாமல் போனதற்கு மறைமுகக் காரணிகள் இருந்ததாக', அப்போலோ அறிக்கை தெரியப்படுத்தியது. அது என்ன என்பதை மருத்துவமனை நிர்வாகம் தெளிவுபடுத்தவில்லை. சிகிச்சை விவரங்களை மறைத்த காரணத்துக்காக, அப்போலோ நிர்வாக இயக்குநர் பிரதாப் ரெட்டியையும் விசாரிக்க வேண்டும். ஜெயலலிதாவுக்குக் கொடுக்கப்பட்ட மருந்துகள்; இதயத் துடிப்பு முடக்கத்துக்கான காரணங்கள்; கடைசியாக அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சை விவரங்கள் ஆகியவற்றை வெளிக் கொண்டு வர வேண்டும் என சிபி.ஐ அதிகாரிகளிடம் வலியுறுத்த இருக்கிறார் சசிகலா புஷ்பா. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் நடந்த விவரங்களை ஆவணமாகத் தொகுத்திருக்கிறார். சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணைக்கு அழைக்கும்போது, இந்த ஆதாரங்களை அவர் வழங்குவார்" என்றார் விரிவாக.
" ஜெயலலிதா மரணத்தில் மர்மம் என நாள்தோறும் யாராவது ஒருவர் கிளம்பிக் கொண்டே இருக்கின்றனர். மருத்துவர் சிவக்குமார் மட்டும் அவருக்கு சிகிச்சை அளிக்கவில்லை. லண்டன் மருத்துவரின் சிகிச்சை தொடர்ந்தபோது, எய்ம்ஸ் மருத்துவர்களை அனுப்பி வைத்தார் பிரதமர் மோடி. அங்கு என்ன நடந்தது என்பதைப் பற்றி எய்ம்ஸ் மருத்துவர்கள், மத்திய அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளனர். நாங்கள் தவறு செய்தோம் என்றால், அப்போதே மருத்துவமனையில் இருந்து எங்களை அப்புறப்படுத்தியிருக்கலாமே? எங்கள் உறவினர்கள் யாரும் எம்.எல்.ஏ பதவியில்கூட இல்லை. எங்கள் உத்தரவுகளைப் பின்பற்றும் அளவுக்கு அதிகாரிகளும் அங்கு இல்லை. பிறகு நாங்கள் எப்படி தவறு செய்திருக்க முடியும்? மக்கள் மத்தியில் ஜெயலலிதா மரணம் குறித்த சர்ச்சையை நீட்டிக்கவே மத்திய அரசு விரும்புகிறது. எந்த விசாரணைக்கும் நாங்கள் தயார்" என்கின்றனர் மன்னார்குடி உறவுகள்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.