தனியார் கார்களில், வாடகை ஆட்டோக்களில் எந்த விவரமும் கேட்காமல் ஏறி உட்கார்ந்து பயணம் செய்கிற ஆசாமிகள், இறங்கும் போது இனி சண்டையுடன்தான் இறங்க வேண்டி வரும். ஆட்டோ உரிமம் பெறுதல், புதுப்பித்தல் மற்றும் கனரக வாகனங்களான லாரி, டிப்பர் லாரி போன்றவற்றுக்கான எஃப்.சி-க்களுக்கு கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
'என்ன காரணம்?' பெட்ரோல், டீசல் விலை உயர்வால் ஏற்கெனவே மோட்டார் வாகனத் தொழிலில் இருப்பவர்கள் மூச்சுத் திணறிக் கொண்டிருக்க, புதிதாய் வந்துள்ள 'விலை நிர்ணயம்' அவர்களோடு சேர்த்து நம்மையும் அழுத்த ஆரம்பித்துள்ளது. மோட்டார் வாகன ஓட்டுநர் உரிமம் வாங்குதல், புதுப்பித்தல், (எஃப்.சி) மறு புதுப்பித்தல் (ரென்யூவல்), டிரைவிங் கற்றுத் தருதல், டிரைவிங் பயிற்சிப்பள்ளி வைத்தல் என்று சகலமும் அடி வாங்கும் நிலையிலான 'விலை நிர்ணயம்' இது என்கின்றனர். இந்தத் தொழிலையே நம்பியுள்ள பலரும். இந்தியாவில் உள்ள எந்த மாநிலத்திலும் கூடுதல் கட்டண விகிதமான இதை அமல்படுத்தி நடைமுறைக்குக் கொண்டுவராத நிலையில் முதன்முதலாக தமிழ்நாட்டில் இதற்கு விதை ஊன்றப்பட்டிருக்கிறது.
'அரசின் இந்தப் புதிய கட்டண நிர்ணயத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து விளக்குகிறார் தமிழ் மாநிலக் கட்சியின் தொழிற்சங்கத் தலைவர் ஜி.ஹாத்தீம்பேக், "மத்திய அரசு நேரடியாகவும் மறைமுகமாகவும் கொடுக்கும் இப்படிப்பட்ட அழுத்தங்கள் கண்டிக்கத்தக்கது. ஆட்டோ உரிமம் பெறுதல், புதுப்பித்தல் மற்றும் கனரக வாகனங்களான லாரி, டிப்பர் லாரி போன்றவற்றுக்கான எஃப்.சி-க்களில் அதிகப்படியாய் ஏற்றியுள்ள கட்டண உயர்வும் அடித்தட்டு மக்களின் தலையில்தான் வந்துமுடியும். ஷேர் ஆட்டோ டிரைவர்கள், ஆட்டோக்களில் குறைந்த தூரம் பயணிக்கிற பெண்கள் குழந்தைகளிடம் ஏழு ரூபாய் மட்டுமே கட்டணம் வாங்குவார்கள்.
அடுத்து, 15,20,25 ரூபாய் என்று தூரத்துக்கு ஏற்றது போல் கட்டணம் வாங்குவார்கள். இனி அப்படி வாங்க முடியாது. அப்படி வாங்கினால் ஆட்டோ ஓட்டுநருக்கு அது நஷ்டத்தையே கொடுக்கும். ஆக, ஷேர் ஆட்டோக்களிலும் இனி ஆரம்பக் கட்டணமே 20 ரூபாயில் இருந்துதான் ஆரம்பிக்கப் போகிறது. வேறு வழியே இல்லை. இது ஆட்டோவுக்கு மட்டுமல்ல, அனைத்து மோட்டார் வாகனங்களுக்கும், அந்த வாகனத்தின் மூலமாக நடக்கிற வணிகத்துக்கும் இதே உயர்வு எளிதாகப் பொருந்திப்போகும். காய்கறி, மீன், உப்பு, கருவாடு உள்ளிட்ட அத்தனை வணிகத்திலும் விலை உயர்வு இதனால் எதிரொலிக்கும். ஒன்றும் செய்யமுடியாது" என்கிறார் ஹாத்தீம் பேக்.
மோட்டார் வாகன வர்த்தகம் மற்றும் லைசென்ஸ் துறை அனுபவம் கொண்ட எஸ். கந்தசாமி கூறுகையில், " இரண்டு சக்கர வாகன (டூ-வீலர்-லைசென்ஸ்) ஓட்டுநர் உரிமத்துக்கான முதற்கட்ட சான்று (எல்.எல்.ஆர்) பெற இதுவரையில் 60 ரூபாய்தான் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் கட்டணமாக வாங்கப்பட்டது. 60 ரூபாய் கட்டணம்தான் இப்போது 290 ரூபாய் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிள் அல்லது ஏதோ ஒரு வாகனப் பதிவுக்கு (சிங்கிள்-க்ளாஸ்) மட்டும்தான் இந்த கட்டண விகிதம் பொருந்தும். ஒரே நேரத்தில் இரண்டு விதமான (டபுள்-க்ளாஸ்) வாகனங்களுக்கு கட்டணம் 290 ரூபாய் அல்ல, 350 ரூபாயாக செலுத்தப்பட வேண்டும். டெஸ்ட்டிற்கு சிங்கிள் கிளாஸ் என்றால் 350 ரூபாயும், டபுள் க்ளாஸ் என்றால் 450 ரூபாயும் இருந்தது. இப்போது அதுவே 1,400 ரூபாய் ஆகியுள்ளது. ரெனியூவல் (புதுப்பிப்பு) கட்டணம் 350 ரூபாயிலிருந்து 600 ரூபாயாக உயர்த்தப் பட்டுள்ளது.
புதுப்பிப்பு நாள் தவறி ஒரு மாதகாலம் அவகாசத்தில் பணம் செலுத்த வந்தாலும் 50 ரூபாய்தான் கூடுதலாக அபராத கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. இப்போது அதுவே ஆண்டுக்கு ஆயிரம் ரூபாய் என்ற கணக்கில் பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. நான்காண்டு கழித்து புதுப்பிக்க வந்தால் ஆண்டுக்கு ஆயிரம் ரூபாயாக கட்டணம் செலுத்தப்படவேண்டும். ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிக்கான புது லைசென்ஸ் பெற ஐந்தாயிரம் ரூபாயும், ரெனியூவலுக்கு 2,500 ரூபாயும் முன்னர் கட்டணமாக இருந்தது. இப்போது புது லைசென்ஸ் பெறவும், உரிமத்தைப் புதுப்பித்துக் (எஃப்.சி) கொள்ளவும் ஒரே கட்டணமாக ரூ.10 ஆயிரம் என்று நிர்ணயம் செய்து விட்டனர். லாரிகளை எஃப். சி-க்கு கொண்டு வர பத்து நாட்கள் 'கிரேஸ்' (கூடுதல் கால அவகாசம்) டைம் கொடுப்பது நடைமுறையில் முன்னர் இருந்தது. கிரேஸ் டைமிற்குப் பின்னர் எஃப்.சிக்கு வரும் லாரிகளின் பேரில் அபராதமாக 100 ரூபாய் மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டும். அப்படி செலுத்துவது இப்போது சாத்தியமில்லை. ஆண்டில் 11 மாதங்கள் மட்டுமே லாரிகளை அதன் டிரைவர்கள் ஓட்டமுடியும். ஒரு மாத காலத்துக்குள் லாரியில் அனைத்து வேலைகளையும் முடித்துக்கொண்டு எஃப்.சி-க்கு லாரியைக் கொடுத்துவிட வேண்டும்.
எஃப்.சி-க்கு லாரியை அனுப்பி வைக்க ஒருநாள் தவறினால் கூட 50 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும். அதுவே சில நாட்கள் தள்ளிப் போனால் நாளொன்றுக்கு இவ்வளவு என்று வசூல் தொகை ஏறிக் கொண்டே இருக்கும். ஒரு ஆட்டோ டிரைவர் ஓராண்டு காலம் வரையில் உடல்நிலை, குடும்பச் சூழ்நிலை காரணமாக எஃப்.சி. செய்யாது போனால், அதற்காக அவர் ரூ. 18 ஆயிரத்து 250 ரூபாய் அபராதம் செலுத்திய பின்னரே ஆட்டோ எஃப்.சி. க்ளியர் செய்யப்படும். இது டாட்டா ஏஸ், குட்டியானை போன்ற வாகனங்களுக்கும் பொருந்தும். ஒரு ஆட்டோ டிரைவருக்கு வாழ்நாள் 'டாக்ஸ்' கட்டணமே 7,200 ரூபாய் தான். ஆனால், எஃப்.சி. செய்யாமல் ஓராண்டு தள்ளிப் போனால் அதை விட இருமடங்கு கூடுதலாக கட்டணத்தை வரியாக செலுத்துகிற கட்டாயம் இப்போது ஏற்பட்டு உள்ளது.
தமிழ்நாடு முழுவதும் 1422 ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகள் இருக்கின்றன. ஓட்டுநர் பயிற்சி அளித்து லைசென்சும் பெற்றுத்தர முன்னர், 4 ஆயிரம் ரூபாயை வசூலித்து வந்த பயிற்சிப் பள்ளிகள், இப்போது வேறு வழியில்லாமல் 7ஆயிரம் ரூபாயை வசூலிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. ஒரு வாகன லைசென்சோடு இன்னொரு வாகன லைசென்சை இணைப்பதற்கு (என்டாஸ்மென்ட் கட்டணம்) 125 ரூபாய் மட்டுமே பெற்றது போய், இப்போது அங்கும் சோதனை காலம் வந்து விட்டது. பைக் என்றால் ரூ. 525, காருக்கு ரூ. 1,100, கனரக வாகனங்களுக்கு 3,050 ரூபாய் என்று கட்டணம் எகிறிப் போய் விட்டது. ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி அலுவலகத்தை நடத்த 600 சதுர அடி போதும் என்ற நிலையையும் மாற்றி விட்டதால் 1,350 சதுர அடியில் இருந்து இன்னும், இன்னும் என்று சதுர அடி அளவை அரசு அதிகாரிகள் கூட்டிக் கொண்டே போகத் தொடங்கியுள்ளனர். இது ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி என்ற ஒன்றை முற்றிலும் அழிக்கும் செயலாகத்தான் கருத வேண்டியுள்ளது. மொத்தத்தில் அனைத்து மட்டத்திலும் இந்த கட்டண உயர்வு பாதிப்பை கொடுத்துள்ளது. லாரியில் தொடங்கி ஆட்டோ வரையில் கட்டண உயர்வு என்பது நேரடியாக பொதுமக்களோடுதான் அனைவரையும் மோதலில் கொண்டு போய் நிறுத்தும்... இது காலப் போக்கில் தவிர்க்க முடியாத ஒன்றாகி விடும் என்பதையும் இங்கே கவனித்தாக வேண்டும்.
அதேபோல் தவணை கொள்முதல் ரத்து சான்றிதழுக்கான கட்டணம் பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வும் உடனடியாக அமலுக்கு வந்திருக்கிறது. திடீர் கட்டண உயர்வு அறிவிப்பால் காலை முதல் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் எந்தவித பணியும் நடைபெறவில்லை" என்றார் கந்தசாமி. ஏ.டி.எம், ஜல்லிக்கட்டு, பொங்கல் நாளுக்கு விடுமுறை மறுப்பு என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பூதத்தை அற்புத விளக்கிலிருந்து துடைத்தெடுத்து வெளியே அனுப்பிக் கொண்டிருக்கிறது மோடி அரசு... ஆர்.டி.ஓ. அலுவலக விவகாரம், இன்றைய தேதிக்கு புதிதாய் கிளம்பியுள்ள ஒரு பூதம். நாளை எந்த பூதம் கிளம்புமோ?

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.