Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 12, 2017

பயிர்கள் கருகிய சோகத்தில்.. திருச்சி விவசாயி தூக்கிட்டு தற்கொலை.. தொடரும் துயரம்


தொடரும் துயரமாக தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சியின் காரணமாக 150க்கும் மேற்பட்ட விவசாயிகள் மரணமடைந்துள்ளனர். இன்றும் திருச்சி விவசாயி ஒருவர் வயலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். காவிரியில் இருந்து நீர் கிடைக்காததாலும், பருவ மழை போதிய அளவு பெய்யாததாலும் தமிழகம் வறட்சி பூமியாகிவிட்டது. இதனால், நெல், கருப்பு, வாழை, சோளம், மஞ்சள் என அனைத்துப் பயிர்களும் கருகி நாசமடைந்துவிட்டன.

பயிர்கள் கருகியதைக் கண்ட அதிர்ச்சியில் 150க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டும், மாரடைப்பு ஏற்பட்டும் மரணம் அடைந்துள்ளனர். இந்நிலையில் இன்று திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள பல்லாவரத்தைச் சேர்ந்த விவசாயி பழனிச்சாமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பயிர்கள் கருகியதால் மனமுடைந்த பழனிச்சாமி, வயலுக்கு அருகில் இருந்த மரம் ஒன்றில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். பொங்கல் திருவிழா கொண்டாடும் தருணத்தில் விவசாயிகளின் வீடுகள் இழவு வீடுகளாக காட்சி அளிப்பதாகவும், இதனை தடுக்க தமிழக அரசு தக்க நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும் விவசாயிகள் கோரியுள்ளனர்.


No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.