Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 4, 2017

ஜலதோஷம் இருக்கும் போது குழந்தைகளுக்கு பால் கொடுக்கக்கூடாது... ஏன் தெரியுமா..!


குளிர் கால நேரமிது. குழந்தைகளுக்கு ஜலதோஷம், காய்ச்சல் என்று பள்ளிக்கு அடிக்கடி விடுமுறை எடுத்து அவதிப்படுவதைக் காண சகிக்காமல், பெற்றோர்களும் அவதிப்பட்டுக் கொண்டிருப்பார்கள்.

 அவர்களுக்கு எல்லாம் உணவில் நாம் செய்யும் தவற்றைச் சொல்லி, சில உணவுகளைத் தவிர்க்கச் சொல்கிறார் சித்த மருத்துவர் வேலாயுதம்.



''சளித்தொந்தரவு இருக்கும் நேரத்தில் குழந்தைகள் எதையும் சாப்பிடாமல் சோர்வாக இருப்பார்கள். அப்படியே எடுத்துக் கொண்டாலும் உட்கொண்ட அனைத்தையும் வாந்தி எடுத்து சிரமப்படுவார்கள். அப்போதெல்லாம் உடனே குழந்தைகள் விரும்பும் பாலை அவர்களுக்கு கொடுப்பது, அவர்களுக்கு நாம் தெரியாமல் செய்யும் உடல்நலக்கேடே.

பொதுவாக, நம் உடலில் 3 விதமான உயிர்க்கூறுகள் இருக்கின்றன. அவை கபம், வாதம், பித்தம். இவை ஒவ்வொன்றும் ஒன்றோடு ஒன்று சம்பந்தப்பட்டதே. இவற்றில் ஏதாவது ஒன்றுக்கு பிரச்னை என்றால் மற்ற இரண்டையும் தாக்கி உடலில் பிரச்னையை உருவாக்கும்.

இதில் இனிப்பு உணவுகள் எதைச் சாப்பிட்டாலும் அவை கபத்தை அதிகரிக்கும். பால், சர்க்கரை, வெல்லம், மாவுச்சத்து போன்றவை கபத்தை அதிகரிக்கும். அதனால்தான் குழந்தைகளுக்கு சளித்தொந்தரவு மற்றும் காய்ச்சல் பாதித்த நேரங்களில் பாலை கொடுக்கக்கூடாது என்கிற வழக்கம் இருந்து வந்தது.

சளித்தொந்தரவின்போது பாலை கொடுத்தால் அவை சளியை அதிகப்படுத்தி குழந்தைகளை பாடாய்ப்படுத்திவிடும். அதேபோல தாய்ப்பால் அருந்துகிற குழந்தையாக இருந்தால், தாய் காரமான உணவுகளை உண்டால் மட்டுமே குளிர்காலத்தில் குழந்தைக்கு சளிப்பிடிக்காது.

காரமான உணவு - இஞ்சித் துவையல், மிளகு, பூண்டு ரசம், பூண்டுக் குழம்பு, சுண்டைக்காய், தூதுவளை போன்றவற்றை எடுத்தால் மட்டுமே தாய்ப்பால் மூலம் குழந்தைக்கு சளிப்பிடிக்காமல் இருக்கும்.

கால ஒழுக்கம் என்பது பாரம்பர்யமாக சொல்லப்பட்டு வரும் ஒரு வார்த்தை. அந்தந்த காலத்துக்கு ஏற்ற உணவுகளை உண்ண வேண்டும் என்பதே அதன் பொருள்.

குளிர் காலத்தில் காரமான உணவை எடுக்க வேண்டும் என்கிற அடிப்படை விதியும் கால ஒழுக்கத்தின் உள்ளேதான் வரும். அப்படிப்பட்ட உணவுகளை எடுத்தால் மட்டுமே உடல் எந்த பிரச்னைகளும் இல்லாமல் தன் வேலையைச் செய்யும்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.