Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 11, 2017

ஜல்லிக்கட்டு! பீட்டாவுக்கு சின்மயி வைக்கும் வேண்டுகோள்


ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு பீட்டா அமைப்பு ஒத்துழைக்க வேண்டும் என பின்னணி பாடகி சின்மயி வேண்டுகோள் வைத்துள்ளார்.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறுவது வழக்கம். உச்ச நீதிமன்ற தடையால் கடந்த 2 ஆண்டுகளாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக்கோரி மாநிலம் முழுவதும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகிறது. அரசியல் கட்சித் தலைவர்கள், நடிகர், நடிகைகள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு பீட்டா அமைப்பு ஒத்துழைக்க வேண்டும் என  பின்னணி பாடகி சின்மயி வேண்டுகோள் வைத்துள்ளார். மேலும், ஜல்லிக்கட்டுப் போட்டி தமிழக கலாசாரத்துடன் இணைந்தது என்றும், விதிகளை கடுமையாக்கலாமே தவிர ஜல்லிக்கட்டை ஒட்டுமொத்தமாக தடை செய்வது தவறு என்றும் அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.