தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், அவர் வகித்து வந்த முதல்வர் பதவி ஓ.பி.எஸ் கைக்குப் போனது நிரந்தரப் பொதுச் செயலாளர் பதவி, பொதுச் செயலாளர் பதவியாகச் சுருங்கி சசிகலா கைக்குப் போனது. அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா இருந்தபோது, அவரைப் பார்க்க பலமுறை முயன்று வாசலிலேயே தடுக்கப்பட்டவர் தீபா. உள்ளே போனவர்களும் ஜெயலலிதாவைப் பார்க்க அனுமதிக்கப் படவில்லை என்பது வேறு.
ஜெயலலிதாவின் உடன்பிறந்த சகோதரர் ஜெயராமனின் மகளான தீபாவுக்கு அப்போலோவில் மட்டுமல்ல, ஜெயலலிதாவின் உடல் வைக்கப்பட்டிருந்த ராஜாஜி ஹாலிலும் நுழைய அனுமதி கிடைக்கவில்லை. டிசம்பர் 29-ந்தேதி நடந்த அ.தி.மு.க பொதுக்குழுவில் சசிகலா அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளராக நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டார். கடந்த ஆண்டு டிசம்பர் - 31-ம் தேதி காலை அ.தி.மு.க தலைமைக் கழகத்தில் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்ட டிசம்பர்- 29, கட்சி அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்ட டிசம்பர் -31 ஆகிய இரு நாட்களிலும் தலைமைக்கழகத்தில் எதிர்பார்த்த அளவில் கூட்டம் இல்லை. அதே வேளையில் கட்சியிலோ, ஆட்சி அதிகாரத்திலோ இல்லாத தீபாவின் வீட்டுக்கு அ.தி.மு.க தொண்டர்கள் தேடி வந்து ஆறுதல் சொல்கின்றனர். பொதுச் செயலாளர் பதவியைப் பிடித்த சசிகலா அடுத்து முதல்வர் ஆகலாம் என்ற முடிவில் இருந்தாராம். ஆனால், தீபாவுக்கான வரவேற்பைப் பார்த்து சசிகலா தரப்பினர், முதல்வர் பதவிக்கான காலம் இதுவல்ல, எதிர்ப்புகள் பெருகி வரும் நேரம்' என்று கருதுகின்றார்களாம். கட்சியில் சசிகலா பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட அறிவிப்பு டிசம்பர் 29-ம் தேதி வெளியானது முதல் சென்னை தி.நகர், சிவஞானம் தெருவிலுள்ள தீபா வீட்டுக்கு தொண்டர்கள் திரள ஆரம்பித்து விட்டனர். தீபா வீடு களை கட்டிப் போனது.
முதல் இரண்டுநாட்கள் வரையில் தேடிவந்த சொற்ப ஆட்களிடம் தீபாவே பேசி அனுப்பி வைத்தார். "எனக்குத் தெரியும்... உங்களின் உணர்வுகளை நான் புரிந்து கொள்ளாமல் இல்லை. கொஞ்சம் பொறுங்கள்" என்று சொல்லியே வந்தவர்களை வழியனுப்பி வைத்தார். நாளுக்கு நாள் கூட்டம் அதிகமாகிக் கொண்டே போனதால், தேடி வருகிறவர்களின் பெயர், செல்போன் நம்பர்களை அங்குள்ள 'என்ட்ரி' புத்தகத்தில் எழுதி வாங்க தீபாவின் உதவியாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.அ.தி.மு.க-வினரில் சிலர் சசிகலாவின் படங்களை புரொபைல் படங்களாக வைத்துக் கொண்டது போல தீபாவின் படங்களையும் சிலர் புரொபைல் படமாக செல்போன்களில் வைக்கத் தொடங்கியுள்ளனர். அந்தவகையில் தீபாவுக்கு தமிழ்நாடு முழுவதிலும் அ.தி.மு.க-வினரின் ஆதரவு கூட ஆரம்பித்துள்ளது.
தீபாதீபாவுக்கு உண்மையிலேயே எதனால் கட்சியினர் ஆதரவு கூடி வருகிறது என்று விசாரித்தோம். "சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் தென் மாவட்டங்களில் நெல்லை, விருதுநகர், தூத்துக்குடி ஆகிய இடங்களில், தீபாவுக்கு ஆதரவு கணிசமாக கூடியுள்ளது. தலைநகர் சென்னையில், பகுதிச் செயலாளர்கள், அணிச் செயலாளர்கள் மற்றும் முன்னாள் மாவட்டச் செயலாளர்கள் என்று பொறுப்பில் இருக்கும் நிர்வாகிகள் 25 பேரும் முன்னாள் நிர்வாகிகள் 15 பேரும் தீபாவை சந்திக்க 'டேட்' கேட்டுள்ளனர். உள்ளாட்சி மன்றப் பிரதிநிதிகளில் முன்னாள் மேயரில் தொடங்கி கவுன்சிலர்கள் வரையில் ஒவ்வொரு மாவட்டமாக போனில் தொடர்பு கொண்டு பேசி தங்களைத் தாங்களே ஒருங்கிணைத்துக் கொண்டு வருகின்றனர். தலைவர் எம்.ஜி.ஆர் கட்சி தொடங்கியபோது இருந்த எழுச்சியை இப்போது மீண்டும் பார்க்கமுடிகிறது. ராமாவரம் கார்டனில் இருந்து போயஸ் கார்டனுக்கு மாறிய எங்கள் கட்சி இப்போது தி.நகருக்கு மாறிப் போய் இருக்கிறது அவ்வளவுதான் !
தீபா வசிக்கும் தி.நகர் சிவஞானம் தெருவில் உளவுப் போலீசார் சாதாரணமாகச் சுற்றி வருகிறார்கள். அங்கே தினமும் வந்து செல்லும் சிலரிடம் பேசினேன்.
"இப்போதைக்கு எங்கள் கட்சியின் எதிர்காலம் பிரகாசமாய் இருக்கிறது. தீபாம்மாவின் அரசியல் பிரவேசமும் சிறப்பாக இருக்கிறது" என்கின்றனர் தீபா வீட்டு முன் கூடும் அ.தி.மு.க-வினர். "ஒரு இடத்திலாவது 'தீபாம்மா' போஸ்டர் கிழிக்கப் பட்டிருக்கிறதா என்று பாருங்கள் எல்லா இடங்களிலும் கிழிபடும் போஸ்டர்கள் சசிகலா போஸ்டர்களே. தமிழ்நாட்டுக்கு யாராவது முதலமைச்சராக வரட்டும், போகட்டும். இப்போது அவர்களின் பக்கம் அதிகாரமும் சக்தியும் இருக்கலாம். ஆனால் தலைவரும், புரட்சித் தலைவி அம்மாவும் வளர்த்துக் கொடுத்த கட்சி இருப்பது எங்களிடம் தான். அதைத்தான் எங்களின் தீபாம்மா மூலம் மேலும் வளர்க்கப் போகிறோம் " என்றனர் சிலர். அடுத்து வரும் நாட்களில் இன்னும் கூடுதல் தகவல்கள் வெளிவரும் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது ...
ஜனவரி 1 அல்லது 2 ஆகிய இரண்டு தேதிகளில் ஒன்றில் சசிகலா முதல்வராக முடிசூட்டப் படுகிறார் என்று சொல்லிக் கொண்டு இருந்த அ.தி.மு.க. வட்டாரங்கள் அதன் பின்னர் இது பற்றிப் பேசுவதைக் கணிசமாக குறைத்திருப்பதைப் பார்க்கலாம்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.