Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 9, 2017

கேரளாவில் யானையையும், ராஜஸ்தானில் ஒட்டகத்தையும் தடை செய்ய முடியுமா.. விஜயகாந்த் கேள்வி


அலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், கேரளாவில் யானையையும், ராஜஸ்தானில் ஒட்டகத்தையும் தடை செய்ய முடியுமா என்று கேள்வி எழுப்பினார்.
மதுரை அலங்காநல்லூரில், ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும் என்று கோரி தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கிய அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் பீட்டா அமைப்பிற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரினார்.
Can ban on elephant and camel asks Vijayakanth

மேலும், கேரளாவில் யானையையும், ராஜஸ்தானில் ஒட்டகத்தையும் தடை செய்ய முடியுமா என்றும் கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய அவர், தமிழக மக்கள் தங்கள் பிள்ளைகள் போல் மாடுகளை வளர்த்து வருகின்றனர் கூறினார்.

இந்த ஆண்டு ஜல்லிக்கட்டை நடத்த தமிழக அரசு அவசரச் சட்டத்தை இயற்ற வேண்டும் என்றும் அப்போதுதான் ஜல்லிக்கட்டை நடத்த முடியும் என்றும் அவர் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.