January 18, 2017
குடியரசு தினத்தை கருப்பு தினமாக அனுசரிப்போம்- ஆதார் அட்டையை ஒப்படைப்போம்- மாணவர்கள் எச்சரிக்கை!
ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்காவிட்டால் குடியரசு தினத்தை கருப்பு தினமாக அனுசரிப்போம் என மாணவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆதார் அட்டையையும் திருப்பி ஒப்படைப்போம் எனவும் மாணவர்கள் கூறியுள்ளனர்.
ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி தராவிட்டால் ஜனவரி 26-ந் தேதி நாட்டின் குடியரசு தினத்தை கருப்பு தினமாக அனுசரிப்போம் என போராட்ட களத்தில் உள்ள மாணவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழர்களின் பண்பாட்டு அடையாளமான ஜல்லிக்கட்டுக்காக வரலாறு காணாத போராட்டத்தை தமிழகம் எதிர்கொண்டிருக்கிறது.
ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் கொண்டுவர வேண்டும்; ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும்; பீட்டாவை தடை செய்ய வேண்டும் என்பதுதான் மாணவர்கள், இளைஞர்களின் கோரிக்கைகள்.
அலங்காநல்லூரில் தொடங்கிய இந்த போராட்டம் தமிழகம் முழுவதும் அனைத்து நகரங்களிலும் நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் அனைத்து கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள், ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அனுமதிக்காவிட்டால் வரும் 26-ந் தேதி இந்திய மத்திய அரசின் குடியரசு தினத்தை கருப்பு தினமாக அனுசரிப்போம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன் மத்திய அரசின் ஆதார் தட்டையை திருப்பி ஒப்படைக்கும் போராட்டத்தையும் நடத்துவோம் என அறிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குடியரசு தினத்தை கருப்பு தினமாக அனுசரிப்போம்- ஆதார் அட்டையை ஒப்படைப்போம்- மாணவர்கள் எச்சரிக்கை!
Reviewed by மறத்தமிழன்
on
January 18, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
January 18, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.