January 30, 2017
அஜால் குஜால் சாமியார் ஆசராம் பாபுவிற்கு ஜாமீன் இல்லை
சர்ச்சைக்குரிய சாமியார் ஆசராம் பாபுவிற்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்த உச்ச நீதிமன்றம் அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
குஜராத் மாநிலம், அகமதாபாத்தைச் சேர்ந்த சாமியார் அஸ்ரம் பாபு. இவருக்கு ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆசிரமம் மற்றும் அறக்கட்டளை இருக்கின்றன.
சாமியார் ஆசரம் பாபு மற்றும் அவரது மகன் நாராயன் சாய் ஆகியோர் மீது சூரத்தை சேர்ந்த இரு சகோதரிகள், பாலியல் புகார் அளித்து இருந்தனர். இந்த வழக்கில் கடந்த 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சாமியார் ஆசரம் பாபு கைது செய்யப்பட்டு ராஜஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில், உடல்நிலை காரணங்களை மேற்கோள் காட்டி தனக்கு இடைக்கால ஜாமீன் வழங்க கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து தள்ளுபடி செய்துவிட்டது.
அதேபோல், ஆசரம் பாபு தாக்கல் செய்த வழக்கமான ஜாமீன் மனுவும் நிராகரிக்கப்பட்டது. முக்கிய சாட்சிகள் மீது நடத்தப்படும் தாக்குதல் வழக்கை தாமதப்படுத்த நடக்கும் முயற்சிகள் ஆகியவற்றை குறிப்பிட்டு உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.
அஜால் குஜால் சாமியார் ஆசராம் பாபுவிற்கு ஜாமீன் இல்லை
Reviewed by மறத்தமிழன்
on
January 30, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
January 30, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.