Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 30, 2017

நிறவெறியை கையில் எடுத்தது அமெரிக்கா – தொடர் பயந்தில் இந்திய வம்சாவளியினர்


இந்திய வம்சாவளி அமெரிக்க பெண், போலீசாரின் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரான், ஈராக், லிபியா, சோமாலியா, சூடான், சிரியா மற்றும் ஏமன் ஆகிய முஸ்லிம் நாடுகளை சேர்ந்தவர்களுக்கு விசா கொடுப்பதில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

மேலும், பாதுகாக்கப்பட்ட நகரங்கள் என்று அழைக்கப்பட்டு வந்த நகரங்களில் இதுவரை சட்ட விரோத குடியேறிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்த நிலையில், இப்போது அங்கும் நடவடிக்கை தொடரும் என்கிறார் ட்ரம்ப்.

இந்நிலையில், அமெரிக்காவில் குடியுரிமை பெற்ற இந்திய பெண் ஒருவர் அங்கு கடும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

பெல் ஏர் பகுதியை சேர்ந்த, 47 வயதாகும் அரவிந்தா பில்லல்மர்ரி மேரிலேண்ட் பகுதியில் வாக்கிங் சென்றபோது, போலீசாரால் தடுக்கப்பட்டார்.

நீங்கள் சட்ட விரோதமாக குடியேறியவர்களா என போலீசார் அவரை பார்த்து கேட்டுள்ளனர். இதனால் அரவிந்தா பில்லல்மேர்ரி அதிர்ச்சியடைந்தார்.

இந்தியாவை சேர்ந்த இவரது பெற்றோர் அமெரிக்காவில் குடியேறியவர்கள். இவர் சிறு வயது முதலே அமெரிக்காவில்தான் வசித்து வருகிறார்.

ஆனால், நிறத்தை வைத்து இவ்வாறு ஒரு கேள்வியை அமெரிக்க அதிகாரிகள் முன் வைத்திருக்க வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.

ஏன் உங்கள் ஐடி கார்டை கொண்டுவரவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளனர் அதிகாரிகள்.

இதன்பிறகு தங்கள் கம்ப்யூட்டரில் அரவிந்தா பில்லல்மேர்ரி பெயரை பயன்படுத்தி தேடியுள்ளனர். அப்போதுதான் உண்மை தெரிந்துள்ளது. இதன்பிறகு விடுவித்துள்ளனர்.

 இதுகுறித்து பில்லல்மேர்ரி கூறுகையில், நாட்டு மக்களின் பாதுகாப்பு முக்கியம்தான். ஆனால், அது குடிமை உரிமைகளை நொறுக்காமல் இருக்க வேண்டும் என்றார்.

ட்ரம்ப் ஆட்சிக்கு வந்த பிறகு இன்னும் பல இன்னல்களை அமெரிக்க குடிமக்கள் அனுபவிக்க வேண்டிவருமோ என்கிற பயமும், அமெரிக்கா நிறவெறியை கையில் எடுத்து அட்டூழியம் செய்கிறதோ என்கிற சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.