சமூகத்தில் பாலுறவு சம்பந்தமான பிரச்சனைகள் அதிகளவில் காணப்படுகின்றன. இந்த பிரச்சனைகளை கட்டுப்படுத்துவதில் ஆணுறை முக்கிய பங்கு வகிக்கிறது.
ஆணுறையானது பாலுறவு தொடர்பான நோயை தடுப்பதுடன், கருத்தரிப்பையும் தடுக்கிறது. எனினும், இந்த ஆணுறைகளால் முழுமையான பயன் கிடைப்பதில்லை என்றும், அதனை பயன்படுத்தினாலும் 18% கர்ப்பம் அடைவதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மேம்படுத்தப்பட்ட கருத்தடை சாதனங்களை உருவாக்குவது தொடர்பாக அமெரிக்காவின் சிகாகோவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழக மருந்தியல் துறை பேராசிரியர் ரொனால்ட் தலைமையிலான குழுவினர் ஆய்வு நடத்தினர்.
அந்த ஆய்வின் இறுதியில், புதிய வகை கருத்தடை மருந்து ஒன்றை உருவாக்கி இருக்கிறார்கள். ஸ்டீரின் அல்மாலிக் ஆசிட் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த மருந்து சிறந்த கருத்தடை மருந்தாக செயல்படுகிறது.
இதனை முயல்களுக்கு கொடுத்து சோதனையிட்ட போது, மருந்து வெற்றிகரமாக செயல்பட்டதாக ஆய்வு குழுவினர் தெரிவித்துள்ளார்கள்.
இந்த மருந்தை பயன்படுத்தும்போது இனப்பெருக்க ஹார்மோன்களில் மாற்றத்தை ஏற்படுத்தி, அதன் மூலம் ஆண் விந்தில் உயிரணுக்கள் எண்ணிக்கை மிக குறைவாகி விடுகிறது.
இந்த மருந்தை பயன்படுத்தும்போது இனப்பெருக்க ஹார்மோன்களில் மாற்றத்தை ஏற்படுத்தி, அதன் மூலம் ஆண் விந்தில் உயிரணுக்கள் எண்ணிக்கை மிக குறைவாகி விடுகிறது.
இதனால் அந்த ஆண் உயிரணுவால் கருத்தரிக்க செய்ய முடியாத நிலை உண்டாகும். இந்த மருந்தை ஊசி மூலம் உடலில் செலுத்திக் கொள்ளலாம். இதன் செயல்பாடு ஓராண்டு வரை நீடிக்கும் என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
இந்த மருந்தை மனிதனுக்கு பயன்படுத்துவது சம்மந்தமாக இன்னும் சில ஆராய்ச்சிகள் செய்ய வேண்டியது உள்ளது. அதன்பிறகு இதை மனிதன் பயன்பாட்டுக்கு அனுப்பி வைப்போம் என்று தெரிவித்திருக்கிறார்.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.