January 16, 2017
சமூக வலைதளம் மூலம் குறைகளை சுட்டிக்காட்டினால் கடும் நடவடிக்கை
சமூக வலைத்தளத்தில் புகார் தெரிவிக்கும் ராணுவ வீரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ராணுவ தளபதி பிபின் ராவத் எச்சரித்துள்ளார்.
எல்லையில் பணிபுரியும் பாதுகாப்புப் படைவீரர்களுக்குத் தரமான உணவு வழங்கப்படவில்லை என வீரர் ஒருவர் குறைகூறும் காட்சி சமூக வலைத்தளத்தில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதேபோல் ராணுவ வீரர்களுக்கு இணையாகப் பணிபுரியும் தங்களுக்கு அவர்களுக்கு இணையான ஊதியமும் சலுகைகளும் வழங்க வேண்டும் என மத்திய ரிசர்வ் காவல் படைவீரர் தெரிவிக்கும் காட்சியும் வெளியானது.
இந்நிலையில் ராணுவ தினத்தை முன்னிட்டு டெல்லியில் ராணுவ வீரர்களிடையே நேற்று உரையாற்றிய தரைப்படை ராணுவ தளபதி பிபின் ராவத், ராணுவ வீரர்கள் தங்களின் குறைகளைப் படையில் உள்ள குறைகேட்பு அதிகாரிகளிடமே தெரிவிக்க வேண்டும் என்றார்.
சமூக வலைத்தளம் மூலம் குறைகளை தெரிவிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிபின் ராவத் எச்சரித்தார்
சமூக வலைதளம் மூலம் குறைகளை சுட்டிக்காட்டினால் கடும் நடவடிக்கை
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
January 16, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
January 16, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.