January 2, 2017
சசிகலாவின் முகத்தில் கரியைப்பூசி, பேனர் கிழிப்பு!
திருப்பூர் : அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள சசிகலா நடராஜனின் ஃபிளக்ஸ் பேனர்கள் கிழிக்கப்பட்டுள்ளன.
ஜெயலலிதா மறைந்ததை தொடர்ந்து அவரது தோழியான சசிகலா அதிமுகவின் பொதுச்செயலாளராக கட்சி நிர்வாகிகளால் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கு வாழ்த்து தெரிவித்து மாவட்ட நிர்வாகிகள் சார்பில் திருப்பூர் மாவட்டத்தில் அவரது ஃபிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டன. வைக்கப்பட்ட 30 பேனர்களும் அன்று இரவே சேதப்படுத்தப்பட்டன. மேலும் காங்கேயம் கிராஸ் ரோடு, நஞ்சப்பா பள்ளி உள்ளிட்ட பல இடங்களில் வைக்கப்பட்ட பேனரில் இருந்த சசிக்கலாவின் படம் கிழிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை புதிய பஸ் நிலையம் அருகில் வைக்கப்பட்டிருந்த பேனரில் இருந்த சசிகலாவின் படம் கிழிக்கப்பட்டது. மேலும் அங்கு வைத்திருந்த மற்றொரு பேனரில் சசிகலாவின் முகத்தில் கரி பூசப்பட்டுள்ளது. இதனையடுத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தொண்டர்கள் மத்தியில் சசிகலாவுக்கு பெரும் எதிர்பபு அதிகரித்து வருவதாகவும் பேசப்படுகிறது.
சசிகலாவின் முகத்தில் கரியைப்பூசி, பேனர் கிழிப்பு!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
January 02, 2017
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
January 02, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.