Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 11, 2017

மாட்டை அடக்குவதில் என்ன வீரம் இருகிறது? விஷால் கொந்தளிப்பு!



ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர்கள் பலர் குரல் கொடுத்து வருகிறார்கள். கமல்ஹாசன், சூர்யா, சிம்பு, சூரி ஆகியோர் ஜல்லிக்கட்டில் காளைகள் வதைக்கப்படுவது இல்லை என்றும், ஏறு தழுவுதல் என்ற பெயரில் தமிழர்கள் பாரம்பரியமாக நடத்தி வரும் இந்த போட்டிக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் வற்புறுத்தி இருக்கிறார்கள்.
நடிகர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில், ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் அடையாளம் மற்றும் அவர்களுடைய ஒருங்கிணைந்த குரல்.
ஜல்லிக்கட்டை ஆதரிப்போம், ஜல்லிக்கட்டு தேவையானது என்று கூறியுள்ளார். ஆனால் விஷாலின் பார்வை வேறு மாதிரி இருக்கிறது. இதுகுறித்து அவர் கடந்த ஆண்டு தெரிவித்த கருத்து பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.
“வாயில்லா ஜீவன்களை மிரட்டி ஓடவிடுவதும் அதை கூட்டமாகத்  விரட்டி மேலே பாய்வதும் பாவம். இதில் வீரம் இல்லை, ஆனால் நல்ல விளையாட்டு என்று கூறலாம்” என்றார். அவர் சொல்லி பல நாள் ஆனாலும் ஜல்லிகட்டு என்றவுடன் விஷாலின் இந்த கருத்து நினைவுக்கு வருவதால், சமூக வலைதளங்களில் இது பரவி வருகிறது.
இசையமைப்பாளரும் நடிகருமான ஜீ.வி.பிரகாஷ், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக “கொம்பு வச்ச சிங்கம்டா” என்ற பாடலை இசையமைத்து வெளியிட இருப்பதாகவும் அந்த பாடல் மூலம் கிடைக்கும் வருமானத்தை கஷ்டப்படும் விவசாயிகளுக்கு அளிக்கப்போவதாகவும் டுவிட்டரில் அறிவித்து இருக்கிறார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.