Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 9, 2017

தீபா உடன் கூட்டு? தாக்குதல்? மாவுக் கட்டுடன் வீட்டிற்குள் சைதை துரைசாமி!



சென்னை மாநகர முன்னாள் மேயர் சைதை துரைசாமி தீபாவுடன் கூட்டு சேர்ந்து அதிமுகவை உடைக்க சதி செய்து வருவதாக ஒரு தகவல் பரவியது.
இது வதந்தி என சைதை துரைசாமி விளக்கம் அளித்துள்ளார். சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக பதவி ஏற்க வேண்டும் என வலியுறுத்திய மூத்த தலைவர்களில் ஒருவர் சைதை துரைசாமி.
இந்நிலையில் அவர் தீபாவுடன் கூட்டு சேர்ந்து விட்டதாக சிலர் கட்டுக்கதைகளை கட்டவிழ்த்து விட்டனர். அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூட சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவின. இதுகுறித்து சைதை துரைசாமி விளக்கம் அளித்துள்ளார்.
 கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி வீட்டின் மாடி படியில் இருந்து தவறி விழுந்து விட்டாராம். இதனையடுத்து மருத்துவர்களை அழைத்துள்ளார்.
அவர்கள் வந்து பார்த்தபோது, சவ்வு கிழித்து விட்டதாக கூறியுள்ளனர். இதனையடுத்து கட்டு போட்டு விட்டு சென்றுள்ளனர்.
இதனால் அவர் கடந்த சில நாட்களாக வெளியிடங்களுக்கு செல்லாமல் வீட்டிற்குள் முடங்கியுள்ளார். இந்த நேரத்தில் தான் விஷமிகள் இப்படி ஒரு வதந்தியை கிளப்பிவிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.