January 31, 2017
சென்னை அருகே கடலில் படர்ந்த எண்ணெய் வேகமாக பரவுவதால் அச்சம்: படலத்தை அகற்றுவதில் தொடர்ந்து சிக்கல்
போதிய வசதிகள் இல்லாததால் சென்னை அருகே கடலில் கலந்த எண்ணெய்யை பிரித்து எடுக்கும் பணியில் தோய்வு ஏற்பட்டுள்ளது. வேகமாக பரவும் எண்ணெய் படலம் திருவான்மியூர் வரை பரவிவிட்டதால் அச்சம் நிலவுகிறது. சென்னை எண்ணூர் துறைமுகம் அருகே கடந்த 27ம் தேதி 2 எண்ணெய் கப்பல்கள் மோதி விபத்துக்குள்ளாகின. அப்போது 1 கப்பலில் இருந்து பல்லாயிரம் லிட்டம் எண்ணெய் கசிந்தது. 1 அடி உயரத்திற்கு திட்டாக படர்ந்துள்ள எண்ணெய்யை பிரித்து எடுக்கும் பணியில் கடலோர காவல் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
பொருத்தமான இயந்திரமின்றி பக்கெட் மூலம் எடுத்து மட்டுமே அப்புறப்படுத்துவதால் நான்கு நாட்கள் ஆகியும் எண்ணெய்யை பிரித்து எடுக்க முடியவில்லை. கடலில் வேகமாக பரவும் எண்ணெய் படலம் திருவான்மியூர் வரை பரவிவிட்டது. எண்ணெய் கசடுகள் தார் போல ஓதுங்கி வருவதால் கடலோரம் துர்நாற்றம் வீசுகிறது. கப்பல்கள் மோதிக் கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், அதன் பிறகே வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் ஆய்வுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
கடல் மாசுபாடு காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. சில இடங்களில் பிடிக்கப்படும் மீன்களையும் பொதுமக்கள் வாங்க தயங்குவதால் மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எண்ணெய் படலத்தை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று எண்ணெய் துறைமுகத்தில் எரிவாயுவை இறக்கிவிட்டு சென்ற கப்பலும், கச்சா எண்ணெய் ஏற்றிவந்த கப்பலும் பயங்கரமாக மோதிக் கொண்டன. இந்த விபத்து காரணமாக எண்ணெய் கடலில் கலந்துள்ளது.
சென்னை அருகே கடலில் படர்ந்த எண்ணெய் வேகமாக பரவுவதால் அச்சம்: படலத்தை அகற்றுவதில் தொடர்ந்து சிக்கல்
Reviewed by மறத்தமிழன்
on
January 31, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
January 31, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.