Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 4, 2017

போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை பாலியல் ரீதியாக சீண்டிய உதவி ஆய்வாளர்: அத்துமீறலுக்கு ஆளாகிய பெண்கள் வாக்குமூலம்




கடந்த 31-ஆம் தேதி மத்திய அரசின் ரூபாய் நோட்டைத் திரும்பப் பெறும் நடவடிக்கை குறித்து ஆர்ப்பாட்டம் நடத்தியது இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம். இதில் ஆண்கள், பெண்கள் என பலர் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது காவல்துறை ஆய்வாளர் ரவி, காவலர் நடராஜ் ஆகியோர் பாலியல் சீண்டல்களை செய்திருக்கின்றனர். அதைக் கண்டித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆண்களை காவல்துறை கடுமையாக தாக்கியது. இது ஊடகங்களில் வெளியாகி பலரும் கண்டித்த நிலையில், காவல்துறையினரின் அத்துமீறலுக்கு ஆளாகிய பெண்கள் தங்களுக்கு என்ன நடந்தது என்பதை விரிவாக பேசியுள்ளனர்.
அதில், ஆய்வாளர் ரவி, மகள் வயதில் இருந்த ஒரு பெண்ணின் மார்பை கசக்கினார் என்றும் பாலியல் வசைச் சொற்களால் பெண் காவலர்கள் உட்பட தங்களை பேசினர் என்றும் தெரிவித்துள்ளனர். அதோடு, சங்க நிர்வாகிகளை போராட்டத்தில் இனி ஈடுபடக்கூடாது என்பதற்காக பெயரைக் கேட்டு கேட்டு அடித்ததாகவும் தெரிவிக்கின்றனர். சங்கம், போராட்டம் என்று திரிந்தால் பாலியல் தொழிலாளிகளாகவே மாற்றிக்காட்டுவோம் என போலீஸார் மிரட்டியதாகவும், நான் ஒரு ஆண் என்று நிரூபிக்கிறேன் என்னிடம் படுக்க வறிய என்று பாலியல் சீண்டல்களை காவல்துறை ஆய்வாளர் செய்துள்ளார் என இந்தப் பெண்கள் தெரிவிக்கின்றனர்.



No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.