Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 17, 2017

குடும்ப ஆட்சி தான் செய்வோம் என்ன பண்ணுவீங்க? : நடராஜன் கேட்கிறார்? பதில் சொல்லுங்கள் நண்பர்களே



நேற்று நடந்த மன்னார்குடி குடும்ப பொங்கல் விழாவில் சசிகலா கணவர் நடராஜனும், உறவினர் திவாகரனும் பொங்கித் தீர்த்து விட்டார்கள்.
திவாகரன் நாங்கள் இல்லை என்றால் ஜெயலலிதாவே இல்லை, கட்சியும் இல்லை. நாங்கள் தான் ஜெ.,வைக் காப்பற்றினோம் என்றார்.
அதன் பின் பேசிய நடராஜன் நாங்க குடும்ப ஆட்சிதான் பண்ணுவோம். என்ன பண்ணுவீங்க? நாங்கதான் ஜெயலலிதாவைக் காப்பாற்றினோம். ஆட்சியைக் கலைக்க பிஜேபி முயற்சிக்கிறது. பன்னீர் ஆட்சியில் என்ன குறை இருக்கிறது என்கிறார் நடராஜன்.
இவ்வளவு நாட்கள் அமைதியாக இருந்த நடராஜன்,திவாகரன் பொது  மேடையில் பொங்கியதைப் பார்த்தால் ஏதோ ஒரு மறைமுக அழுத்தம், மிரட்டல் இருப்பதாகவே தெரிகிறது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
யார் ஆட்சி செய்ய வேண்டும் என்பதை மக்கள் தானே  முடிவு செய்ய வேண்டும். இவர்கள் யார் முடிவு செய்ய..?
ஒரு வேலை ஜெ.,வை காப்பாற்றினாலும் அதற்கான பலன்களை இவர்கள் அனுபவிக்கவே இல்லையா என்கிற ஒரு கேள்வியும் கேட்கிறார்கள், நடுநிலையாளர்கள்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.