January 17, 2017
கள்ளக்காதல் , மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்த கணவன்!
ஆம்பூர் ஏ.கஸ்பா நெசவு காரத்தெருவை சேர்ந்தவர் மஞ்சுநாதன் (வயது 34). இவரது மனைவி இந்துமதி (24). இவர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் மஞ்சுநாதன் சாராயம் விற்றுள்ளார்.
போலீசார் அவரை தேடியபோது, ஒரு மூதாட்டி மஞ்சுநாதனை காட்டி கொடுத்தார். ஆத்திரமடைந்த மஞ்சுநாதன் காட்டி கொடுத்த மூதாட்டியை கத்தியால் தாக்கினார். இந்த வழக்கில் கைதாகி சிறையில் இருந்த அவர் தற்போது ஜாமீனில் வெளியே இருந்தார்.
இதற்கிடையே மனைவி நடத்தையில் மஞ்சுநாதனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. யாரோ ஒரு வாலிபருடன் மனைவி இந்துமதிக்கு கள்ளக்காதல் இருப்பதாக சந்தேகப்பட்டார். இதுதொடர்பான தகராறு வெடித்தது.
நேற்றிரவு ஆத்திரத்தில் இருந்த மஞ்சுநாதன், மனைவி என்றும் பார்க்காமல் இந்து மதியின் கழுத்தை அறுத்து படுகொலை செய்தார். இதையடுத்து, தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார். தகவலறிந்து வந்த ஆம்பூர் டவுன் போலீசார் உடலை மீட்டனர்.
பிரேத பரிசோதனைக்காக அடுக்கம் பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு இந்துமதியின் உடலை அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து தலைமறைவான மஞ்சுநாதனை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
கள்ளக்காதல் , மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்த கணவன்!
Reviewed by மறத்தமிழன்
on
January 17, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
January 17, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.