January 29, 2017
ஆடிப்போனது கூகுல் நிறுவனம் அமெரிக்க அதிபரின் அதிரடிக்கு – சுந்தா்பிச்சை வேதனை,
அமொரிக்க அபதிர் டிரம்பின் அதிரடி அறிவிப்பால் முதலில் நிலைகுலைந்தது. பேஸ்புக் நிறுவனம். தற்போது தனது எதிர்ப்பை கூகுல் நிறுவனமும் பதிவு செய்துள்ளது. சிலிக்கான் வேலி டிரம்புடன் நேரடியாக மோதுவதற்கு தயாராகிவிட்டது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் தேர்தல் பிரசாரத்தின் போது கூறியது போல அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்ற வேண்டும் என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.
அமெரிக்காவின் நலன்களை கருதி ஈராக், சிரியா உள்ளிட்ட ஏழு இஸ்லாமிய நாடுகளுக்கு இனி விசா கிடையாது என டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளது கடும் அதிருப்தியை கிளப்பியுள்ளது.
அந்நாடுகளில் இருந்து அகதிகளாக யாரும் இனி அமெரிக்கா வர முடியாது. தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்தவே இந்த நடவடிக்கை என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
சுமார் 10 மில்லியன் பேர் சட்டவிரோதமாக அமெரிக்காவில் வசித்து வருகிறார்கள்.
அவர்களை சொந்த நாட்டுக்கு திரும்ப அனுப்ப வேண்டும். இதற்காக 10 ஆயிரம் அதிகாரிகளை நியமிக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இதனால் வெளிநாட்டவரை அதிகம் நம்பி இருக்கும் சிலிக்கான் வேலி கலக்கத்தில் உள்ளது.
ட்ரம்ப் தேர்தலில் வெற்றி பெற்றதும் டெக் சிஇஓக்கள் அதிர்ச்சியில் ஸ்டேட்டஸ் தட்டியது அனைவரும் அறிந்ததே.
அடுத்ததாக கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சையும் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறார்.
அவரது அறிவிப்பில் ” அல்பபெட் நிறுவனத்தின் கிளை நிறுவனமான கூகுளில் இருந்து இந்த செய்தியை வெளியிடுகிறோம்.
அதிபர் ட்ரம்ப்பின் புதிய அறிவிப்பின் படி பாதிக்கப்படும் கூகுள் பணியாளர்கள் உலகின் எந்த நாடுகளில் இருந்தாலும் உடனடியாக அமெரிக்க திரும்புங்கள் என்று கூறியுள்ளார்.
மேலும் ட்ரம்பின் இந்த அறிவிப்பு 100க்கும் மேற்பட்ட டெக் நிறுவனங்களை பாதிக்கும். குறிப்பாக எங்கள் நிறுவன பணியாளர்களை இந்த புதிய சட்டம் பாதிப்பது வருத்தமளிப்பதாக உள்ளது. நாங்கள் தொடர்ந்து புலம்பெயர்தலில் உள்ள கொள்கைகளை கடைபிடித்து வருகிறோம்.
சிரியா, ஈராக், ஈரான், சூடான், சோமாலியா, ஏமன் மற்றும் லிபியா ஆகிய ஏழு நாடுகளில் இருந்து மக்கள் அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதித்துள்ளார்.
அதுமட்டுமின்றி அந்த நாடுகளில் உள்ள க்ரீன்கார்டு மற்ரும் விசா வைத்திருப்போரையும் கூட விமானத்தில் ஏற அனுமதிக்கவில்லை என அமெரிக்க பத்திரிக்கை தகவல்கள் கூறுகின்றன.
கூகுள் நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் இந்த புதிய அறிவிப்பில் உள்ள சிக்கல்களை கலைய முயற்சி செய்து வருகிறோம்.
ஆனால் இந்த புதிய சட்டம் தொடர்ந்தால் அமெரிக்கா நிறைய திறமைசாலிகளை இழக்க நேரிடும்.என்று கூகுளின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கூகுளின் ஒரு அதிகாரி இந்த அறிவிப்பின் காரணமாக நியூஸிலாந்து பயணத்தை ரத்து செய்துவிட்டு அமெரிக்கா திரும்புகிறார் என்றும் கூகுள் கூறியுள்ளது.
இந்த ஏழு நாடுகளில் உள்ள க்ரீன் கார்டு வைத்திருப்போர் உடனடியாக நாடு திரும்புங்கள்.
H-1B விசா வைத்திருப்பவர்களால் திரும்ப முடியாது. இது ஒரு இக்கட்டான சூழல் இதனை சமாளித்தாக வேண்டிய சூழலில் கூகுள் உள்ளது.
இதே நிலையில் தான் அனைத்து டெக் நிறுவனங்களும் உள்ளது. மைக்ரோசாஃப்ட்டும் இதே கருத்தை வலியுறுத்தியுள்ளது.
ஆடிப்போனது கூகுல் நிறுவனம் அமெரிக்க அதிபரின் அதிரடிக்கு – சுந்தா்பிச்சை வேதனை,
Reviewed by மறத்தமிழன்
on
January 29, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
January 29, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.