January 4, 2017
ஏட்டு முதல் எஸ்.பி.வரை உல்லாச உலகம்!
சமீபத்தில் வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் காவல் நிலையத்தில் பணியாற்றும் லாவண்யா என்கிற பெண் காவலர் மீது இரண்டு நபர்கள் ஆசிட்வீசினர்.
அது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. தனிப்படை அமைக்கப்பட்டது. பல உண்மைகள் கண்டறியப்பட்டது.
அவற்றில் சில வெளியாகின. பல மூடிமறைக்கப்பட்டன.
எவையெல்லாம் மூடிமறைக்கப்பட்டன என்பதை நேர்மையான காவல் அதிகாரி ஒருவர் நம்மிடம் சொன்னார்.
சார் விஜயகுமாருன்னு ஒரு எஸ்.பி. அவரு ஒரு டாக்டர். ஆனால், மனைவியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடால் காவல்துறைக்கு வந்தார்.
அவருக்கு குணசேகரன் என்கிற ஆய்வாளர் துறை ரீதியான சில நுணுக்கங்களை சொல்லிக்கொடுத்தார்.
அப்படியே பெண்காவலர் லாவண்யாவையும் அறிமுகம் செய்துவைத்தார்.
லாவண்யா ஆயுதப்படை போலீஸ். ஆனால், மேலிடத்தின் வெயிட்டான சிபாரிசின் பேரில் அவருக்காக திருப்பத்தூரில் டெல்டா என்று ஒரு படையை உருவாக்கி போர்ஸ் வாகனம் கொடுத்து அன்போடு பாதுகாக்கப்பட்டார்.
விஜயகுமாரும், குணசேகரனும் தன்னுடன் சவகாசம் வைத்திருப்பதை காட்டி இந்த பெண் போலீஸ் பல ஆப்ளிகேஷன்களை செய்தார்.
அவர்கள் டிரான்ஸ்பர் ஆனதும் அம்மணிக்கு திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஓ.டி கொடுக்கப்பட்டு பணியில் இருந்தார்.
அதை வைத்து ஏகப்பட்ட ஆண்நண்பர்களை சம்பாதித்தார். கூடவே பணமும் ஈட்டினார். இந்நிலையில் அவரது நண்பர்களில் ஒருவரான பிரபாகரனிடம் 24 லட்சம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக லாவண்யா மீது ஆசீட் வீசப்பட்டது.
அதை வைத்து விசாரித்த போது லாவண்யாவுக்கு 21 ஏ.டி.எம்.கார்டுகள் உள்ளதையும் 95 லட்சம் ரூபாய் பணம் வங்கிகளில் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், வெள்ளி, தங்க, நகைகள், அரசாங்க ஊழியராக இருந்துக்கொண்டு, துறை அனுமதி பெறாமல் வீடு கட்டியிருப்பது மற்றும் எஸ்.பி. விஜயகுமார், ஏ.எஸ்.பியாக இருந்த வருண்குமார், டி.எஸ்.பிகள் சுப்பிரமணி,கணேசன் ஆய்வாளர் குணசேகரன், போலீஸ் சிவா என பலர் இவரிடம் பலான நண்பர்களாக இருந்துள்ளதை செல் போன் ரிக்கார்டிங் மற்றும் கால்லிஸ்ட்டை வைத்து கண்டுபிடித்திருக்கிறார்கள்.
ஒழுக்கமான பெண்காவலர்கள் சிலரை, இப்படிப்பட்ட ஆண் காவல் அதிகாரிகள்தான் தவறான பாதைக்கு அழைத்துச்செல்கிறார்கள்.
எனவே, இந்த விஷயத்தை மூடிமறைக்காமல் ஆதாரங்களின் அடிப்படையில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஏற்பாடு வேண்டும் என்று அதிர்ச்சி விஷயங்களை சொன்னார்.
துறை ரீதியான நடவடிக்கைக்கு ஏற்பாடுகள் நடந்துவருகிறதாம். அதிகாரிகள் மீதா இல்லை பாதிக்கப்பட்ட லாவண்யா மீதா? பார்ப்போம்.
ஏட்டு முதல் எஸ்.பி.வரை உல்லாச உலகம்!
Reviewed by மறத்தமிழன்
on
January 04, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
January 04, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.