Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 17, 2017

விஸ்வரூபம் எடுத்த ஜல்லிக்கட்டு போராட்டம்! வாட்ஸ் – ஆப், பேஸ் – புக் முடக்கத் திட்டம்?


அலங்காநல்லூரில் 24 மணிநேரம் இரவு பகல் தொடர்ந்து உண்ணாவிரத போராட்டம் நடத்திய மாணவர்கள் இன்று காலையில் கைது செய்யப்பட்டதை கண்டித்து,

சென்னை, திருநெல்வேலி, திருச்சி, கோவை, சேலம் உட்பட பல மாவட்டங்களில் மாணவ, மாணவியர் சமூக வலைதளம் மூலம் இணைந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட மாணவர்கள் வழக்கு இன்றி விடுதலை, ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி, அவசர சட்டம், பீட்டா அமைப்பிற்கு தடை என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடபட துவங்கினர்.

போராட்டம் என்றால் அரசியல்வாதிகள் நடத்துவது போல அரை மணிநேரம் என போலீஸார் நினைத்தனர். ஆனால் மாணவர்கள் காலையில் தொடங்கிய ஆர்பாட்டம் மாலை வரை முடிவிற்கு வரவில்லை.

ஆரம்பத்தில் மாவட்ட தலைநகரில் மட்டும் துவங்கிய ஆர்ப்பாட்டம் நேரம் ஆக ஆக, தமிழகம் முழுவதும் ஊர் ஊருக்கு விரிவு படுத்த துவங்கினர்.

தமிழகத்தில் இது வரை இல்லாத அளவில் இந்த மாணவர்கள் போராட்டம் பெரிய அளவில் மாறி வருகிறது.

இதற்கு உலக நாடுகளிலுள்ள தமிழர்கள் ஆதரவு தெரிவித்து போராட்டம் நடத்திவருகின்றனர்.

இது போன்று மாணவர்கள் இணைவதற்கு முக்கிய காரணம் வலைதளமான, பேஸ்புக் மற்றும் வாட்ஸ்ஆப் தான் என தெரிந்து, போலீஸார் அந்த வலைதளங்களை முடக்க முடிவு செய்துள்ளதாக போலீஸ் வட்டாரத்தில் தகவல் வெளியானது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.