
நேற்று காரகை்குடியில நடைபெற்ற நடிகை திரிஷாவின் படப்பிடிப்பை இளைஞர்கள் திரண்டு தடுத்தி நிறுத்தினர். அதன் வீடியோ காட்சிகள் தற்போது பரவி வருகின்றது. அதில் குடித்து விட்டு ஏசி ரூமில் ஆடும் உனக்கு என்ன தெரியும் எங்கள் கலாச்சாரத்தை பற்றி வெளியே வரச் சொல்லுங்க என இளைஞர்கள் ஆவேசத்துடன் அழைப்பதை காண முடிகின்றது. ஒரு கட்டத்தில் இயக்குனர் வருகின்றார் , நீங்க நட்ட படுகின்றீர்கள் என்பதற்காக எங்கள் விவசாயி நட்டப்பட முடியாது , உங்களுக்கு நட்டம் என்றால் திரிஷா மீது வழக்கு போடுங்கள் நாங்கள் கலைய முடியாது என இளைஞர்கள் கூறுவதை காணொளியில்ர் காண முடிகின்றது. பீட்டா கூத்தாடியே தமிழ்நாட்டை விட்டு வெளியேறு என திரண்ட இளைஞர்கள் கோஷம் எழுப்புகின்றனர்.
இது போன்று இளைஞர்கள் தன்னை தாக்குவதை கண்டித்து டிவிட்டரில் இன்று பதிவிட்டுள்ள நடிகை திரிஷா இளைஞர்கள் எதற்காக எதிர்க்கின்றார்களோ அது குறித்து எதுவும் பேசவில்லை. நான் ஜல்லிக்கட்டை ஆதரிக்கின்றேன் என்றோ பீட்டாவை நான் ஆதரிக்கவில்லை என்றோ அல்லது அது தொடர்பான விளக்கம் எதையும் நடிகை திரிஷா தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.
.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.