Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 18, 2017

தமிழ் பொறுக்கிகளே, தைரியமிருந்தால் முகவரியை பதிவிடுங்கள் : சுப்பிரமணியசுவாமி அடாவடி



ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஆதரவாகவும், பீட்டா அமைப்புக்கு எதிராகவும் இளைஞர்கள் வீதியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த போராட்டம் வெறும் வீதியில் இறங்கி போராட்டமாக இல்லாமல் இணையதளத்தை பயன்படுத்தி சமூக வலைத்தளங்களின் மூலம் இளைஞர்களை ஒன்று திரட்டி அதிக பலத்துடன் நடந்து வருகிறது.
ஜல்லிக்கட்டை தடுத்து நிறுத்திய பீட்டா அமைப்புக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பல்வேறு பதிவுகளை இட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் நடந்து வரும் இந்த போராட்டத்தில் மாணர்வகள், இளைஞர்களின் எழுச்சியை கட்டுப்படுத்த முடியாமல் மத்திய, மாநில அரசுகள் திணறி வருகின்றன.
சமூக வலைத்தளங்களில் பீட்டா அமைப்புக்கு எதிராக கருத்து பதிவிடுபவர்களை சுப்ரமணியம் சுவாமி தனது டுவிட்டர் பக்கத்தில் கடுமையாக சாடி இருக்கிறார்.
மேலும் டுவிட்டரில் பீட்டா அமைப்பை பயமுறுத்தும் விதமாக கருத்துக்களை பதிவு செய்த அனைத்து தமிழ் பொறுக்கிகள் முகவரிகளையும் பதிவிடுங்கள், தேசிய புலனாய்வு அமைப்பு கண்டறியும் என தெரிவித்துள்ளார்.
கருப்பு பூனைப்படை பொறுக்கி என்று ஏன் நான் அவர்களை குறிப்பிட்டதும் பதற்றம் அடைகிறீர்கள்? பயமா? ஸ்டாலினும், கருணாநிதியும் ஏன் தமிழக போலீஸ்படைக்கு பதிலாக மத்திய அரசின் கருப்பு பூனைப்படை கேட்கிறார்கள்? என கூறியுள்ளார் சுப்பிரமணியசுவாமி.
சுப்ரமணியசுவாமி, ஒருமுறைக்கு இருமுறை பொறுக்கிகள் என்று தமிழர்களை ஒட்டு மொத்தமாக அவமானப்படுத்தும் வகையில் பதிவிட்டுள்ளார்.
தமிழர்களின் உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் பதிவிட்டு வரும் சுப்ரமணிய சாமி மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா என்பது தமிழக மக்களின் கேள்வியாகும்.
சுப்பிரமணியம் சுவாமியின் இந்த வலைத்தள பேச்சுக்கு தமிழகம் முழுவதும் கடும் கண்டன குரல் எழும்பியுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.