January 13, 2017
காதி காலண்டர், டைரியில் மகாத்மா காந்தியை நீக்கிவிட்டு மோடி படம். இன்னும் வேற என்ன வேணும் பாலகுமாரா?..
காதி காலண்டர், டைரியில் இருந்து காந்தி படத்தை நீக்கவிட்டு மோடி படம்.. வெடிக்கும் புதிய சர்ச்சை!
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள காதி கிராம தொழில்கள் ஆணையத்தின் காலண்டர்கள் மற்றும் டைரிகளில் உள்ள காந்தியின் படம் நீக்கப்பட்டது. அதற்கு பதிலாக மோடியின் படம் சேர்க்கப்பட்டுள்ளது.
தேசிய காதி கிராம தொழில்கள் ஆணையத்தின் காலண்டர்கள் மற்றும் டைரிகளில் காந்தியின் படம் நீக்கப்பட்டுள்ளதால் ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தின் தலைநகர் மும்பையில் தேசிய காதி கிராம தொழில்கள் ஆணையத்தின் தலைமை அலுவலகம் உள்ளது. அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் டைரி மற்றும் காலண்டர்கள் தரப்படுவது வழக்கம்.
இந்த டைரி மற்றும் காலண்டரில் காந்தி ராட்டையில் நூல் நூற்கும் படம் இடம் பெற்றிருக்கும். ஆனால் இந்த ஆண்டு தேசிய காதி கிராம தொழில்கள் ஆணையம் வெளியிட்டுள்ள டைரி மற்றும் காலண்டர்களில் காந்தியின் படத்திற்கு பதிலாக பிரதமர் மோடி நூல் நுற்பது போன்ற புகைப்படம் இடம்பெற்று உள்ளது.
காலண்டர்களில் மோடியின் படத்தைக் கண்ட ஊழியர்களுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. இதனையடுத்து, ஊழியர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். மேலும், நேற்று மதியம் உணவு இடைவேளையின் போது வாயில் கருப்பு துணியை கட்டிக் கொண்டு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து பெயர் கூற விரும்பாத ஒரு அதிகாரி கூறும்போது, கடந்த ஆண்டு மோடியின் படம் நாட்காட்டியில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், தற்போது காந்தியின் படம் முற்றிலும் நீக்கப்பட்டு, முழுவதுமாகவே மோடியின் படம் வைக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று கூறினார். மேலும், காந்தியின் சிந்தனை, தத்துவம், கொள்கைகளை அரசு புறக்கணித்து வருவது கவலை அளிக்கிறது என்றும் அவர் கூறினார்.
காதி காலண்டர், டைரியில் மகாத்மா காந்தியை நீக்கிவிட்டு மோடி படம். இன்னும் வேற என்ன வேணும் பாலகுமாரா?..
Reviewed by மறத்தமிழன்
on
January 13, 2017
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
January 13, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)



No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.