Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

January 9, 2017

ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தால் பிரியாணிக்கும் தடை விதிக்கவேண்டும் - கமல்ஹாசன்


ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தால் பிரியாணிக்கும் தடை விதிக்கவேண்டும் என்று நடிகர் கமல்ஹாசன் பேசிஉள்ளார்.

ஆண்டுதோறும் நடைபெறும் இந்தியா டுடே கருத்தரங்கம் சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று தொடங்கியது. இதில் பேசிய நடிகர் கமல்ஹாசன் ஜல்லிக்கட்டு போட்டிக்கான தனது முழு ஆதரவையும் தெரிவித்தார். ஜல்லிக்கட்டு போட்டியை மறுபடியும் தொடங்கவேண்டும் என்றார். ஜல்லிக்கட்டு போட்டிக்கு மிகப்பெரிய ரசிகன் நான் ஆவேன் என ஆதரவு தெரிவித்து உள்ள கமல் இப்போட்டியை வெறுப்பவர்கள் பிரியாணியையும் வெறுக்கவேண்டும் என்று கூறிஉள்ளார்.

“ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்கவிரும்பினால் பிரியாணிக்கும் தடை விதியுங்கள்,” என்று இந்தியா டுடே செய்தியாளரிடம் கமல்ஹாசன் கூறிஉள்ளார்.

ஜல்லிக்கட்டு விளையாடிய சில நடிகர்களில் நானும் ஒருவன். தமிழன் என்று பெருமை கொள்கிறேன், இது எங்களுடைய கலாசாரம் என்று கமல்ஹாசன் கூறிஉள்ளார்.

முன்னதாகவும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான தனது முழு ஆதரவை தெரிவித்து இருந்த கமல்ஹாசன் ஜல்லிக்கட்டு போட்டியை ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் காளை போட்டிகளுடன் தொடர்புபடுத்தி குழம்பக்கூடாது என்று கூறியிருந்தார். ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் காளை போட்டிகளில் அவைகள் காயப்படுத்தப்படுகிறது, அவை உயிரிழக்கவும் நேரிடுகிறது, ஆனால் தமிழகத்தில் காளைகள் தெய்வமாக கருதப்படுகிறது, குடும்பத்தில் ஒருவராக காளைகள் வளர்க்கப்படுகிறது என்று கூறினார்.

ஜல்லிக்கட்டு போட்டிகளில் காளைகள் பணியவைக்கப்படுகிறதே தவிர அவை காயப்படுத்தப்படுவது கிடையாது. காளைகள் கொம்புகள் உடைப்பு, பிற இடங்களில் காயம் ஏற்படுத்துவது போன்ற எந்தஒரு காயமும் ஏற்படுத்தப்படுவது கிடையாது என்று தெளிவுப்படுத்தினார் கமல்ஹாசன்.

தமிழ்நாட்டில் நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு ஜல்லிக்கட்டு நடத்த 2014–ம் ஆண்டு மே மாதம் தடை விதித்தது. தமிழக அரசின் வற்புறுத்தலால், மத்திய அரசு ஜல்லிக்கட்டு நடத்த கடந்த ஆண்டு ஜனவரி 8–ந் தேதி அனுமதி வழங்கி அறிவிக்கை வெளியிட்டது. ஆனால், இந்திய விலங்குகள் பாதுகாப்பு சங்கங்களின் கூட்டமைப்பு தொடர்ந்த வழக்கை ஏற்று, சுப்ரீம் கோர்ட்டு ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடை விதித்தது. இதனையடுத்து தமிழக அரசின் மறுஆய்வு மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது. இப்போது போட்டியானது பொங்கல் பண்டிகையின் போது நடைபெற வேண்டும் என்ற கோரிக்கையானது வலுத்து உள்ளது. போராட்டமும் நடைபெற்று வருகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.